இந்த 4 ராசிகளுக்கு தான் கண் திருஷ்டி அதிக அளவில் பாதிப்பை கொடுக்குமாம்
ஜோதிடத்தில் ஒரு சில ராசியினருடைய தலைமைத்துவ பண்புகளும் அவர்களுடைய தனித்துவமான குணாதிசயங்களும் பலருக்கும் வியப்பை தருகிறது.
அந்த வகையில் அந்த குணமே பலருக்கும் பொறாமைகளை உண்டு செய்து அந்த பொறாமை இந்த ராசியினருக்கு கண்திருஷ்டி ஏற்படுத்துகிறது. அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிக அளவு கண்திருஷ்டி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் தலைமைத்துவ பண்பில் மிகவும் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எதையும் ஆளுமை திறனுடன் போராடி வெல்லக்கூடியவர்கள். இவர்களுடைய தனித்துவமான குணமே இவர்கள் மீது அதிக நபர்கள் கண் திருஷ்டி ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்:
இவர்கள் ஒரு விஷயத்தை நினைத்தால் அதை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதேபோல், இவர்களிடம் யார் மோதினாலும் அவர்களுக்கு தோல்வியே உண்டாக்கும். இவர்களிடம் யாரும் மொத்தமுடியவில்லை என்று இவர்களுடைய உயர்ந்த நிலையே இவர்கள் மீது அதிக அளவில் கண் திருஷ்டி பாதிப்பை கொண்டு வரச்செய்கிறது.
துலாம்:
இவர்கள் எப்பொழுதும் நேர்த்தியாகவும் சமநிலையாகவும் அழகாகவும் செயல்பட கூடியவர்கள். இவர்கள் பேசக்கூடிய விஷயங்கள் மிகவும் அழகாகவும் ஒருவரை வியக்க வைக்க கூடியதாகவும் ரசிக்க வைக்க கூடியதாகவும் இருப்பதால் இந்த ரசனையே பலருக்கும் இவர்கள் மீது பொறாமை குணத்தை உண்டு செய்கிறது.
மகரம்:
இவர்கள் அதிக அளவில் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். இவர்களுடைய கடின உழைப்பே மற்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொறாமை குணத்தை உண்டு செய்யும். இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்க கூடியவர்கள்.
இந்த அற்புதமான ஆற்றலும் தெளிவும் ஒரு சிலருக்கு தொந்தரவாக இருக்கக்கூடும். அதனால் இவர்கள் மிகப்பெரிய அளவில் கண் திருஷ்டியால் பாதிக்கப்படுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |