இரவில் மட்டுமே திறந்திருக்கும் கோயில்
இவ்வுலகில் பல கோயில்கள் அமைந்துள்ளன. பொதுவாகவே கூற வேண்டுமென்றால், அனைத்து கோயில்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.
ஆனால் ஒரு கோயில் மட்டும் இரவில் திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. அக்கோயில் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இரவில் மட்டும் திறந்திருக்கும் அதிசய கோயில்
மதுரையில் அமைந்து காலதேவி என்ற கோயிலே இவ்வாறு இரவு நேரத்தில் திறந்துள்ளது.
சூரியன் மறைந்தவுடன் திறக்கப்பட்டு மறுநாள் சூரியன் உதயமாவதற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது.
இது மதுரையில் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரவு நேரத்தில் விஷேட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது மற்றும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டும் அலை மோதி வருவதாக கூறப்படுகிறது.
ஒருவருடைய வாழ்வில் நிகழும் நல்லது மற்றும் கெட்டதிற்கு காரணமாக இருப்பது ராசி மற்றும் நட்சத்திரங்களாகும்.
அந்தவகையில் இக்கோயிலில் வீற்றிருக்கும் கால தேவி அம்மன் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கோயிலின் சிறப்பு
கால தேவி அம்மனின் இக்கோயில் கோபுரத்தில் 'நேரமே உலகம்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அர்த்தம் பின்வருமாறு, ஒருவருடைய வாழ்விற்கு தாழ்வும் நேரமும் வழி வகுப்பதாக கூறப்படுகிறது.
புராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் கால தேவியாக பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.
கால தேவியின் அருளால் 14 லோகங்களும் பஞ்சபூதங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் செயல்படுவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கோயிலின் விமானமும் கருவறையும் எண் கோண வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினையும் தீர்ப்பதற்கு உகந்த ஒரே தாயாக இவர் கருதப்படுகிறார்.
கோயிலை 11 முறை சுற்றி வந்து வலமிருந்து இடமாகவும், இடமிருந்து பலமாகவும் சுற்றி, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும் வாழ்வில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் 11 வினாடியில் நீங்கும் என பக்தர்களால் கூறப்பட்டு வருகிறது.