உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா- முழு தகவல்கள்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாக வருகிற 12ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் நிகழ்வால் மதுரை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
கொடியேற்றம்
12ம் திகதி அன்று காலை 9.55 மணிமுதல் 10.19 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஷ்வரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.
அன்று மாலையே கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஷ்வரரும், மீனாட்சி அம்மனும் சிம்ம வாகனத்தில் 4 மாசி வீதிகளில் உலா வருவர்.
2ம் நாள்
13ம் திகதி காலை சுவாமி அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்- அன்னம் வாகனத்தில் எழுந்தருளல்.
3ம் நாள்
14ம் திகதி காலை 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்- காமதேனு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளல்
4ம் நாள்
15ம் திகதி காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வலம்வருதல்
5ம் நாள்
16ம் திகதி காலை தங்கச்சப்பரத்தில் வடக்குமாசி வீதியில் உள்ள ராமாயணச்சவாடி, நவநீதி கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளல்.
6ம் நாள்
17ம் திகதி காலை தங்கச்சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்- வெள்ளி ரிஷபம் வாகனத்தில் உலா வருதல்
7ம் நாள்
18ம் திகதி காலை தங்கச்சப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர்-யாளி வாகனத்தில் வீதி உலா
8ம் நாள்
19ம் திகதி காலை தங்கப்பல்லக்கு வீதி உலா, இரவு 7.35 மணியிளவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா
9ம் நாள்
20ம் திகதி காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா, அன்று மாலை 4 மாசி வீதிகளிலும் திக்கு விஜயம்
10ம் நாள்
21ம் திகதி வெகுவிமர்சையாக திருக்கல்யாணம் நடைபெறும், இரவு மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் யானை- ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா
தொடர்ந்து 22ம் திகதி காலை திருத்தேரோட்டமும், 23ம் திகதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.