மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்
தமிழநாட்டில் மிக முக்கியமான ஆலயங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.மேலும் அம்மாவின் அதீத அன்பால் மதுரை சுற்றிலும் எந்த திசையை பார்த்தாலும் அம்மா மீனாட்சி அம்மன் பெயராலே பலர் தொழில் தொடங்கி அவர்கள் கடைகளுக்கு அம்பாள் பெயரை வைத்திருப்பதையும் பார்க்க முடியும்.
அவ்வளவு அன்பை சம்பாதித்த அம்பாள் மதுரையை ஆளும் அரசியை பற்றி பலருக்கும் தெரியாத முக்கியமான சுவாரசிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1.அம்பாளின் மேனி பச்சை நிறம் அவை முழுவதும் மரகத கற்களால் ஆன சிறப்புக்கள் பெற்றது.
2.மேலும் அன்னையின் வலது கால் இடது கால் விட சற்று முன் நிற்பது போல் இருக்கும்.அதற்கு காரணம் பத்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு அம்பாள் ஓடி வந்து உதவுவாள் என்பதை குறிக்கிறது.
3.இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.அது பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருப்பது முக்கிய சிறப்பு.
4.பொதுவாக கோயில்களில் சுவாமியை வழிபாடு செய்தே அம்பாளை தரிசிக்க வேண்டும் ஆனால் மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.
5.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.
6.இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.
7.தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம் என்ற அனைத்து பெருமைகளும் கொண்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |