சுப நிகழிச்சி நடத்த பூக்கட்டி உத்தரவு வாங்கும் மக்கள்-விஷேச அம்மன் கோயில்
அனைவரும் சுற்றுலா செல்லும் காலம் கோடைக்காலம் அதிலும் அக்னி நட்சத்திர சமயத்தில் கண் நோய்,அம்மை போன்ற நோய்கள் ஏற்படும்.
மதுரை வண்டி மாரியம்மன் நோய்களை தீர்க்கும் கருணை தெய்வமாக திகழ்கிறார். முன்பு காவல் தெய்வமாக இந்த கோயில் மதுரை நகரின் கிழக்கு எல்லையில் இருந்தது.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வந்து இந்த அம்மனை வழிபடுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதேபோல மழை வரம் வேண்டி இவளை வழிபட்டுள்ளனர். காலப்போக்கில் இவள் மாரியம்மனாக மாறினார். இங்கு அம்மன் சிரித்த முகத்துடன் கைகளில் பாசம் அங்குசம் ஏந்திருக்கிறாள். இடது கால் தொங்கவிட்டும் வலது கால் மடித்த நிலையிலும் இருக்கிறார். காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.
சுப நிகழ்ச்சிகள் நடத்துவோர் பூக்கட்டி அம்மனுடன் உத்தரவை கேட்கின்றனர்.
இன்னும் விஷேசம் என்னவென்றால் இங்கு தரப்படும் தீர்த்தத்தை பருகினால் அம்மை நோய் குணமாகும் கண் நோய் தீர வெள்ளியால் ஆன கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர்.
தோல் வியாதி தீர உப்பு மிளகு செலுத்தி வழிபடுகின்றனர். சன்னதியில் பேச்சியம்மனும் அரச மரத்தின் கீழே விநாயகரும் இருக்கின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |