வெறும் ஒன்பது வாக்கியங்களில் மகாபாரதத்தை புரிந்து கொள்ளலாம்
மகாபாரதம், பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றொன்று இராமாயணம் ஆகும்.
வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளலாம்.
1. குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள் என்பதை உணர்த்தும் - கௌரவர்கள் வாழ்வு.
2. எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும் என்பதை உணர்த்தும் - கர்ணனின் வாழ்வு.
3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் - அஸ்வத்தாமனின் வாழ்க்கை முறை.
4. அறமற்ற அநியாயக்காரர்களின் அதிகாரத்திற்கு பணிந்து அவர் இட்ட ஆணைகளை ஏற்க வேண்டும் என்பதாக ஆழ்ந்த - பீஷ்மரின் வாழ்க்கை முறை.
5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவுடன் செய்யும் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் - துரியோதனின் வாழ்வு.
6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்ககூடாது. அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்த்தும் - திரிதராஷ்டிரன் வாழ்வு.
7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தும் - அர்ஜுனன் வாழ்வு.
8. வஞ்சகமும் , சூதும் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணர்த்தும் - சகுனி வாழ்வு.
9. நீதி நெறிமுறைகள், மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால் மட்டுமே, உலகில் எந்த சக்தியும் தீங்கு செய்யாது என்பதை உணர்த்தும் - யுதிஷ்டிரர் வாழ்வு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |