மஹாசிவராத்திரி 2025:அன்று வீடுகளில் வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள்
நம்முடைய இந்து மதத்தில் மஹாசிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய முக்கிய நாளாக கருதப்படுகிறது.அன்றைய நாளில் பத்தர்கள் கண் முழித்து சிவபெருமானை வழிபாடுசெய்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் நடக்கிறது.இந்த மஹாசிவராத்திரியின் சிறப்புக்கள் குறித்து நம்முடைய புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவர் மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்கள் பெறலாம் என்று திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மஹாசிவராத்திரி அன்று தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. ஆக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் ககணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.அப்படியாக இந்த வருடம் மஹாசிவராத்திரி வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி காலை 11:08 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 27ஆம் தேதி காலை 08:54 மணி வரை உள்ளது.
அன்றைய தினம் நம் வீடுகளில் சிவபெருமானை வழிபாடு செய்து வீட்டில் வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்களை பற்றி பார்ப்போம்.
1.மஹாசிவராத்திரி அன்று வீட்டில் சிவபெருமான் குடும்பமாக இருக்கும் புகை படத்தை வாங்கி வந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும்.இதனால் சிவபெருமானுடைய முழு அருளையும் நம் பெறமுடியும்.
2.அதே போல் மஹாசிவராத்திரி அன்று வீட்டில் சிவலிங்கத்தை கொண்டு வந்து வழிபாடு செய்தால் வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும்.அதாவது வாஸ்து தோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள் மற்றும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.
3.சிவபெருமானின் வடிவமாக கருதப்படும் ருத்ராட்சம் வீட்டிற்கு கொண்டு வருவது சிறப்பாக கருதப்படுகிறது.ஆக,அன்றைய தினம் ருத்ராட்சம் வீட்டிற்கு கொண்டு வந்து அதை முறையாக பிரதிஷ்டை செய்து ருத்ராட்ச மந்திரத்தை 108 முறை உச்சரித்தால்,சிவபெருமானின் பரிபூர்ண அருளை நீங்கள் பெறமுடியும்.மேலும் ருத்ராட்சம் அன்றைய தினம் அணிவதால் உங்களுடைய கர்ம பலன்கள் படிப்படியாக குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |