தென்னிந்தியாவின் துவாரகை.. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்!
தமிழக கோயில்களில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்ததுமான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இது புகழ்பெற்ற வைணவ கோயில்களுள் ஒன்றாக உள்ளது. 108 வைணவ தேசங்களுள் ஒன்றாக இல்லை எனினும் தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாக உள்ளது.
இப்போது இத்தகு சிறப்பு வாய்ந்த மன்னர்குடி ராஜகோபாலசுவாமி கோயிலின் வரலாற்றினை தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு:
குடந்தைக்கு தென்கிழக்கே இருந்த செண்பகவனத்தில் 1008 முனிவர்கள் தவம் இயற்றி வந்தனர். அவர்களுள் தலைசிறந்தவராக இருந்த வாஹி முனிவரின் இரு புதல்வர்களான கோபிளர், கோபிரளயர் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி கடும் தவம் புரிந்தனர்.
அவர்களின் தவத்தினை மெச்சிய பெருமாள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் நீங்கள் விரும்பிய மோட்சம் கிடைக்கும் என அருளினார். எனவே இருவரும் கண்ணபிரானை காண நடைபயணமாக செல்கின்றனர்.
செல்லும் வழியில் காணப்படும் நதிகளில் நீராடிய படி சென்றனர். இவர்களை வழியில் கண்ட நாரதர் அவரது நாரத புத்தியை காட்ட விரும்பினார். இதனால் அவர்களிடம் கண்ணபிரான் தான் வந்த நோக்கம் நிறைவேறியதால் துவாரகையில் இருந்து விண்ணுலகம் சென்று விட்டதாக கூறினார்.
இதனைக் கேட்ட கோபிளரும், கோபிரளயரும் மூர்ச்சையாயினர். இருவரது பக்தியை மெச்சிய நாரதர் செண்பகவனத்திற்கு சென்று கண்ணபிரானை தரிசிக்க கூறினார்.
இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த இருவரும் இரு மடங்கு அதிக ஆர்வத்துடன் செண்பகவனம் நோக்கி சென்றனர். அங்கு கண்ணபிரானை நோக்கி கடும் தவம் புரிந்தனர்.
தவத்தில் மெய் மகிழ்ந்த கண்ணபிரான் அவர்களுக்கு காட்சியளித்தார். அவரிடம் துவாரகையில் கிருஷ்ணர் நடத்திய அனைத்து லீலைகளையும் காணும் பாக்கியம் வேண்டும் என வேண்டினர்.
எனவே கிருஷ்ணவதாரத்தில் தொடங்கி கீதோபதேசம் வரையிகான 32 லீலைகளையும் நடத்தி காட்டினார் கண்ணபிரான்.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் கோயிலின் மூலவராக வாசுதேவர் என்ற பெயரிலும் ராஜகோபால சுவாமி உற்சவ மூர்த்தியாகவும் காட்சியளிக்கின்றனர்.
தினந்தோறும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கப்படும் வேளையில் பசு, யானைக்கு பூஜை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ராஜமன்னார் பெயரை வைத்து இந்த ஊருக்கும் ராஜமன்னார்குடி என்ற பெயரும் வழங்கப்பட்டு வருகிறது.
தல அமைப்பு:
கோயிலின் வரலாற்றினை தெரிந்துகொண்டீர்கள் அல்லவா.. இப்போது கோயிலின் அமைப்பை பற்றி தெரிந்துகொள்ளலாமா.. இந்த கோயிலானது 23 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலாகும்.
நீங்கள் கோயிலுக்குள் நுழையும் வாயிலிலேயே 154 அடி உயரம் கோபுரம் அமைந்துள்ளது.வாயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் பல மண்டபங்களும் வழிபாட்டு தலங்களும் உள்ளன. ராஜகோபால சன்னதி முக்கிய சன்னதியாக அமைந்துள்ளது.
ஸ்ரீ தேவி, பூ தேவி, பராசக்தி, மகா கணபதி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் முக்கிய தெய்வங்களாக உள்ளனர்.
இங்குள்ள முக்கிய தெய்வமான மூலவர் ராஜகோபால சுவாமி சிலை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் உள்ளது.
16 மண்டபங்கள் இந்த கோயிலில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இவை அனைத்தும் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலில் உள்ள சிற்பங்களும் ஓவியங்களும் கலை சிறப்புகளுக்கு எடுத்துக்காட்டாகும். இந்த கோயிலின் 16 மண்டபங்களின் ஒரு மண்டபத்தில் ராஜகோபால சுவாமியின் லீலைகளை சித்தரிக்கும் ஓவியங்களும் அமைந்துள்ளன.
பிற மண்டபங்களில் பல தெய்வங்களின் சிற்பங்களும் கதைகளும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் அமைப்பை பற்றி தெரிந்துகொண்டீர்களா.. இப்போது ராஜகோபாலசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களையும் வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்வோமா..
விழாக்கள்:
மன்னாகுடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பல முக்கியமான விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றுள் ராஜகோபால சுவாமி திருக்கல்யாணாம், கிருஷ்ண ஜெயந்தி, ரதசப்தமி மிக முக்கியமான விழாக்களாகும். இப்போது இந்த விழாக்களை விரிவாக பார்க்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி:
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக முக்கியமான விழாவாகும். இந்த நாளில் ராஜகோபால சுவாமிக்கு சிறப்பான பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன.
திருக்கல்யாணம்:
பங்குனி மாதத்தில் இந்த திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ராஜகோபால சுவாமிக்கும் ருக்மணி தேவிக்கும் வெகு விமரிசையாக இந்த திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ரதசப்தமி:
தை மாதத்தில் ரதசப்தமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி விழாவின் போது பெரிய ரதத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வருவது வெகு சிறப்பு.
தல சிறப்புகள்:
இப்போது கோயிலின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளலாமா..
இங்கு அமைந்துள்ள உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆன சிலையாகும். அதோடு இந்த சிலை சோழர் காலத்தை சேர்ந்ததாகும்.
இங்கு அமைந்துள்ள குளமானது 1,158 அடி நீளத்தையும் 837 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இந்த குளமானது ‘ஹரித் திராந்தி’ என மக்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலின் மற்றோரு சிறப்பு ராஜகோபால சுவாமி ஒரு காதில் கம்மலும் ஒரு கையில் தந்தத்துடனும் காட்சியளிக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் கதை மிக சுவாரஸ்யமானது. வாங்க தெரிஞ்சுக்கலாம்.
துவாரகையில் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தபோது, கிருஷ்ணரையும் பலராமரையும் அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவினான். அதனை அடக்க கிருஷ்ணார் அதனுடய தந்தத்தை ஒடித்தா இதனை குறிக்கும் வகையிலேயே இந்த கோயிலின் ராஜகோபால சுவாமியின் கையில் தந்தம் அமைந்துள்ளது.
கம்மல் இருப்பதற்கான கதை இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். துவாரகையில் இருக்கும் போது யமுனையில் குளித்து கொண்டிருந்த கோபியர்களுக்கு கிருஷ்ணர் போட்டி ஒன்றை வைத்தார்.
அதன் படி கோபியர்கள் குளித்து விட்டு ஆடை, அணிகலன்களை சரியாக அணிந்துகொள்ள வேண்டும் என்பதே போட்டி. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கோபியர் ஒருவரின் தாடங்கத்தை அதாவது கம்மலை எடுத்து அவரது காதில் அணிந்துகொண்டார்.இதை கவனியாத கோபியர்கள் கம்மலை தேடிக் கொண்டே இருந்தனர்.
பின்னர் கிருஷ்ணர் காதில் இருந்த கம்மலை கண்டு மகிழ்ந்தனர். இதனை நினைவூட்டும் வகையிலேயே இந்த தலத்தில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமியில் இடது காதில் கம்மல் அணிந்துள்ளார்.
ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வெளியே ராஜவீதியில் அமைந்துள்ள 54 அடி உயர ஒற்றைக் கல்லாலான கருடஸ்தம்பம் தமிழகத்தின் அதிசய படைப்புகளுள் ஒன்றாக திகழ்கிறது.
கோயிலின் முன்னிலையில் அமைந்துள்ள தூணின் மேற்பகுதியில் கருடாழ்வருக்கென ஒரு சிறு கோயிலும் அமைந்துள்ளது. இங்கே நின்ற நிலையில் கருடாழ்வார் ராஜகோபால சுவாமியை கரங்களை குவித்து வணங்கியவாறு உள்ளார்.
மதுரை கள்ளழகர் கோயிலை போலவே தினமும் மாலையில் இங்குள்ள இறைவனுக்கு தோசை நெய்வேத்தியம் படைக்கப்படுகிறது.
வழிபாடு:
இந்தக் கோயிலில் ஆறு கால பூஜைகள் தினந்தோறும் நடைபெறுகின்றன. காலையில் சுப்ரபாதம், உச்சி கால பூஜை, சாயங்கால பூஜை, இரவு பூஜை ஆகியவை தினமும் நடைபெறுகின்றன.
தினமும் காலையில் 6.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.
மன்னார்குடியின் ராஜகோபால சுவாமி பல நூற்றாண்டுகளாக பல பக்தர்களை கவர்ந்து அவர்கள் கேட்கும் வரமளித்து வருகிறாஅர். இதன் வரலாற்று சிறப்புகளும் கலைச் சிறப்புகளும் வரம் பெற்று செல்லும் மக்களாலும் இது சிறந்த கோயிலாகா மாறி விட்டது. நீங்கள் ஒரு தலைசிறந்த வைணவ கோயிலுக்கு செல்ல விரும்பினால் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் சிறந்த தேர்வாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







