மகா சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
சிவபெருமான் வழிபாட்டிற்கு மிக உகந்த நாளாக மகா சிவராத்திரி இருக்கிறது. இந்த மகா சிவராத்திரியை சிவபெருமானே தனக்கு பிடித்த நாளாக அன்னை பார்வதிவியிடம் தெரிவித்திருக்கிறார். ஆதலால் இந்த நாளின் மகத்துவத்தையும் அற்புதத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த வகையில் மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து இரவு நேரங்களில் விழித்திருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது நமக்கு மிக பெரிய அளவில் திருப்பத்தை கொடுக்கும். மேலும் இன்றைய இரவு சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
அதில் பங்கு கொண்டு நாம் வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை சந்திக்கலாம். அப்படியாக மகா சிவராத்திரி நாளில் நாம் சிவபெருமானைவழிபாடு செய்யும் பொழுது நாம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி பார்ப்போம்.

மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்!
இந்த மந்திரத்தை நீங்கள் 54 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்யும் பொழுது சிவனின் மீது நீங்கள் வைத்திருக்கூடிய பக்தி இன்னும் நெருக்கம் பெறுவதோடு, மனதில் வலிமையும் இறை அன்பும் பெருகும். அது மட்டுமல்லாமல் நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற சோதனை காலம் ஒரு முடிவிற்கு இருக்க வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |