அதிர்ஷ்டம் பெருக கார்த்திகை மாதம் சொல்லவேண்டிய மந்திரம்
மனிதனுக்கு வாழ்க்கையில் வர கூடிய கஷ்டங்களில் மிகப்பெரிய கஷ்டம் பணக்கஷ்டம் தான்.அந்த பணக்கஷ்டம் தான் ஒருவரை வாழ்ககையில் நிலைகுலைய செய்து விடும்.அப்படியான பணக்கஷ்டம் எப்படி தொடங்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்பது யாரும் அறியமாட்டார்கள்.அது தான் நேரம் என்றே சொல்லலாம்.
மனிதனுக்கு நேரம் சரி இல்லை என்றால் எல்லாம் கண்ணை மறைத்து விடுவதோடு பிரச்சனைகள் ஏதேனும் உருவத்தில் வந்து கொண்டே இருக்கும்.அப்படியாக நாம் இந்த பணக்கஷ்டம் விலக அற்புதம் நிறைந்த கார்த்திகை மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
மந்திரம்
‘ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ’
மிகவும் சிறிய மந்திரம் தான்.இதை நினைவில் வைத்து கொண்டு பணத்தை பெரும் பொழுதும் பணத்தை பீரோவில் வைக்கும் பொழுதும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்.மேலும் திடீர் என்று கையில் பணம் இல்லாத பொழுது அவசர பண தேவை உண்டாகும்.
அந்த நேரத்தில் மனதார இந்த மந்திரத்தை சொல்ல பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும். மேலும் இந்த கார்த்திகை மாதத்தில் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் அந்த கிழமையில் ஒரு பச்சை நிற துணியில் கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கற்பூரம், மூன்று ஏலக்காய்களை, வைத்து சின்ன முடிசாக கட்டிக் கொள்ளவும்.
இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ‘ஓம் ஸ்வர்ண இரட்சகாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி இந்த முடிச்சை பணப்பெட்டியில் வைத்தால், பணம் சேராத இடத்தில் கூட பணம் சேரும்.இந்த முடிச்சிற்கு 48 நாள் தான் சக்தி இருக்கும்.
நீங்கள் அதை நம்பினால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்படுகிறது என்று நம்பினால் மீண்டும் அதே போல் இந்த முடிச்சை செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது வீண் பண விரயம் ஏற்படாமல் வீட்டில் பணம் தங்கும் யோகம் உண்டாகி பணத்தால் ஏற்படும் மன உளைச்சல் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |