2026: குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
ஜோதிட சாஸ்திரப்படி குரு பகவான் மிகவும் அதிர்ஷ்டமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, அமைதி, கல்வி ஆகியவற்றை கொடுக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் குரு பகவான் தன்னுடைய இடத்தை மாற்றுகின்ற பொழுதெல்லாம் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் நேரடியாக இருக்கும்.
அதன்படி 2026 ஆம் ஆண்டு மிதுன ராசியில் குரு பகவான் நேரடி பயணம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் அவருடைய பாதையை விரைவில் மாற்றுகிறார்.
அதாவது டிசம்பர் 5, 2025 முதல் பின்னோக்கி செல்கின்ற குருபகவான் மார்ச் 11 2026 அன்று காலை 8. 58 மணிக்கு மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த நேரடி பயணமானது கட்டாயமாக மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டு செய்யும் என்ற சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நேர்மறையான சிந்தனையையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக தெளிவான முடிவை எடுக்க முடியாதவர்கள் கட்டாயம் இந்த காலகட்டங்களில் ஒரு தைரியமான முடிவு எடுத்து செயல்படக்கூடிய அமைப்பு உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவனுடைய இந்த இடமாற்றம் இவர்களுக்கு வருமானத்தை உயர்த்த போகிறது. புதிய தொழில் தொடங்குவதை பற்றி இவர்கள் யோசனை செய்வார்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும். சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை இவர்கள் அடைவார்கள். அது மட்டுமல்லாமல் இழந்த மரியாதையை இவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த இடம் மாற்றமானது இவர்களுக்கு காதலில் இனிமையான உறவை கொடுக்கப் போகிறது. குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பொருள் உதவிகள் கிடைக்கலாம். கலை துறையில் இருப்பவர்கள் இந்த காலகட்டங்களில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |