இன்றைய ராசி பலன்(02.03.2025)
மேஷம்:
இன்று உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்து செய்வீர்கள்.மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்:
உங்கள் வேலையில் சில சிக்கல் உருவாகும்.ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும்.தொழிலில் புதிய வடிக்கையாளரால் லாபம் உண்டாகும்.புதிய நட்பின் அறிமுகம் ஆதாயம் தரும்.
மிதுனம்:
உங்கள் மனதில் தேவை இல்லாத சிந்தனை தோன்றும்.ஒரு சிலருக்கு மன குழப்பங்கள் நாள் முழுவதும் நீடிக்கும்.பிறர் பேச்சை கேட்டு எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கவேண்டாம்.
கடகம்:
பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவது சிறப்பு.பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள்.வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.ந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.
கன்னி:
இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.செயல் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்:
இன்று ஒரு சிலருக்கு காலையில் இருந்து சில நெருக்கடிகளுக்கு ஆளாகலாம்.உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகும்.
விருச்சிகம்:
நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும் என்றாலும், வேலைகளில் கவனம் தேவை. திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
தனுசு:
இன்று நீங்கள் எந்த முயற்சியும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகும்.திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள்.
மகரம்:
வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பணம்வரும். உங்கள் எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும்.
கும்பம்:
பிறருக்காக உங்களை மாற்றி கொள்ளவேண்டாம்.நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் இன்று அவசியம்.குடும்பத்தில் சில மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
மீனம்:
மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.ஆன்மீக பயணம் மேற்கொள்வதால் நல்ல பலன் பெறுவீர்கள்.நினைத்த வருமானம் கிடைக்கும்.நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |