இன்றைய ராசி பலன்(26.12.2024)

Report

மேஷம்:

செய்யும் காரியங்களில் வெற்றிகள் தேடி வ்ரும்.வருமானத்தில் உண்டான பிரச்சனைகள் முற்றிலுமாக விலகும்.யோகமான நாள்.மனதில் உற்ச்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும்.பிரிந்து சென்ற நண்பர்கள் தேடி வருவார்கள்.

ரிஷபம்:

அலுவலகத்தில் உண்டான சுமை குறையும்.வியாபாரத்தில் உங்களுக்கான திறமை வெளிப்படும்.பிறரிடம் தேவை இல்லாத வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.குடும்பத்தில் பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்:

நண்பர்கள் உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள்.எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பிறர் சொல்வதை பலமுறை ஆலோசித்து முடிவு நல்லது.நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.பிறருக்கு உதவி செய்வீர்கள்.

கடகம்:

சுறு சுறுப்பாக செயல்படுவீர். காலையிலேயே எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை ஒட்டி வெளியூர் பயணம் ஏற்படும்.உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சங்கடம் நீங்கும்.

சிம்மம்:

உங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம்.பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.வருமானத்தில் சில தடங்கல் உண்டாகும்.உழைப்பு அதிகரிக்கும்.

கன்னி:

வாழ்க்கையில் அறியாமையால் செய்த தவறுகளை உணர்ந்து பார்ப்பீர்கள்.தனியாக வியாபரம் செய்வதை பற்றிய ஆலோசனை செய்வது நன்மை அளிக்கும்.புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்ட 5 சிவத்தலங்கள்

பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்ட 5 சிவத்தலங்கள்

துலாம்:

உங்களுக்கு துன்பம் கொடுத்தவர்கள் உங்களை விட்டு செல்வர்.மனம் தெளிவடையும்.பிறந்து சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள்.உங்களுக்கான வருமானம் அதிகரிக்கும்.சந்தோஷமான நாள்.

விருச்சிகம்:

உழைப்பின் வழியே சாதகமான நிலையைக் காண்பீர் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் சில சங்கடம் தோன்றும்.

தனுசு:

குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகும்.பிள்ளைகள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.இறை வழிபாடு உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்.

மகரம்:

தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பிடிவாதத்தை விட்டு பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.வெளியூர் பயணம் லாபம் தரும்.

கும்பம்:

பெரியோர் உதவியால் வேலை நடந்தேறும். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.நவீன பொருட்கள் வாங்குவீர்.

மீனம்:

அலுவலகத்தில் உங்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும்.பிள்ளைகள் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US