திருமண அழைப்பிதழை முதலில் யாருக்கு கொடுக்க வேண்டும்?
திருமணம் என்பது ஒரு மனிதனின் மிக முக்கியமான விஷேச நிகழ்ச்சி ஆகும். மேலும், ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து, அவர்கள் இருவரின் மனம் விரும்பி, பிறகு இருவீட்டாரும் பேசி நிச்சயம் செய்து அது திருமண மேடை வரை எந்த ஒரு தடங்கல் இல்லாமல் செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
அதே போல், திருமணம் நடந்து முடிந்த பிறகும் தம்பதியினர் மிகுந்த மன ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும். அதற்கு கட்டாயம் இறைவனின் ஆசீர்வாதம் தேவை.
அந்த வகையில் திருமணத்திற்கு சொந்தங்களை அழைக்க திருமண அழைப்புதல் வைப்பதுண்டு. இவ்வாறு முக்கிய நிகழ்வான திருமண அழைப்புதலை முதலில் யாருக்கு வைக்க வேண்டும்? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.
விநாயகர்:
நாம் எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் முதலில் விநாயகப்பெருமானை வழிபாடு செய்து தான் தொடங்குவோம். அதாவது, வினைகளை தீர்த்து, தடைகளை அகற்றுபவர் விநாயகர். அதனால், திருமண அழைப்பிதழை முதலில் அவருக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது தம்பதியினருக்கு விநாயகரின் அருளால் அவர்கள் வாழ்க்கை எந்த ஒரு தடங்கல் இல்லாமல் மகிழ்ச்சியாக அமையும்.
விஷ்ணு மற்றும் லட்சுமி:
ஒருவர் வாழ்க்கைக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பணமும் மிகவும் தேவையான விஷயம். செல்வத்திற்கும், நிம்மதிக்கும் அதிபதியாக இருப்பவள் மஹாலக்ஷ்மி தாயார். அதனால், விஷ்ணுவும், லட்சுமியும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும். இவர்களின் ஆசீர்வாதத்தால் தம்பதியினர் மனம் மகிழ்ச்சியோடும் செல்வ செழிப்போடும் வாழ்வார்கள்.
அனுமன்:
ஒரு மனிதனுக்கு செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் எவ்வளவு அவசியமோ அதே போல் அவர்கள் சந்திக்கும் இன்னலைகளை சமாளிக்க மன தைரியமும் மிக மிக அவசியம். அனுமன் தைரியத்தையும், பக்தியையும் அருளக்கூடியவர். அதனால், அவரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும்.
குலதெய்வம்:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் ஒன்று இருக்கும். அந்த குலதெய்வம் தான் குலம் காக்கும் தெய்வம் ஆகும். அதனால் கட்டாயம் நாம் குலதெய்வத்திற்கு திருமண அழைப்பிதழை வைக்கவேண்டும். அவர்கள் வணங்கி எந்த ஒரு காரியம் செய்தாலும் குலதெய்வத்தின் அருளால் கட்டாயம் அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள்.
முன்னோர்கள்:
நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க காரணம் நம்முடைய முன்னோர்கள் தான். அதனால் கண்டிப்பாக முன்னோர்களுக்கு அழைப்பிதழை வைக்கவேண்டும். ஒரு அரச மரத்தின் கீழ் அழைப்பிதழை வைப்பதன் மூலம் முன்னோர்களை வணங்கலாம்.
ஆக, திருமணம் என்பது ஒரு ஆண் பெண்ணின் அடுத்த 30 ஆண்டு கால சந்தோஷத்தை தீர்மானிக்கும் விஷயம் ஆகும். அந்த திருமணத்தில் செய்யும் எல்லா விஷயங்களையும் நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், ஒவ்வொரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்யவேண்டும். அதில் ஒன்று தான் கடவுளிடமும் தெய்வங்களிடமும் முன்னோர்களிடமும் ஆசீர்வாதம் பெரும் விஷயம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |