திருமண பத்திரிக்கைக்கான வாஸ்து குறிப்புகள்
அனைவரின் வாழ்வில் மிக முக்கியமான மகிழ்ச்சியான நிகழ்வு என்றால் அது திருமணம் தான், இரு உள்ளங்கள் இணைகிறது என்பதை விட இரு குடும்பங்கள் ஒன்றிணைக்கின்றன என்பதே சரியானதாக இருக்கும்.
ஆட்டம், பாட்டம் என சொந்த பந்தங்கள், பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் நண்பர்கள் என மிக சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
அதேமகிழ்ச்சி வாழ்நாள் முழுமையும் புதுமண தம்பதிகளின் வாழ்வில் நீடிக்க வேண்டும் என்பதே இருவீட்டாரின் விருப்பம்.
இந்த பதிவில் ஜோதிட சாஸ்திரங்களின் படி திருமண பத்திரிக்கையில் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஏனெனில் அதில் உள்ள சிறிய தவறுகள் கூட மணமக்களின் எதிர்கால வாழ்வை பாதிக்கக்கூடாது.
திருமணத்தில் ஆடை முதல் உணவு, பத்திரிக்கை என அனைத்தையும் சாஸ்திரங்களின் படி தெரிவு செய்வது அவசியம்.
நான்கு மூலைகளை கொண்ட பத்திரிக்கையாக இருக்க வேண்டும், மிகப்பெரிய அல்லது முக்கோண வடிவ பத்திரிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
பத்திரிக்கையில் தாமரை போன்ற மலர்களை வைப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது, இரு தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்.
மிக முக்கியமாக பத்திரிக்கைகளின் நிறத்தில் கவனம் தேவை, கருப்பு நிறத்தில் ஒருபோதும் இருக்கக்கூடாது, இதேபோன்று பழுப்பு போன்ற நிறத்தையும் தவிர்க்க வேண்டும்.
மணமகன், மணமகள் மற்றும் உறவினர்களின் பெயர்கள் அடர் நிறத்தில் இருக்க வேண்டாம், பத்திரிக்கைக்காக பயன்படுத்தப்படும் காகிதம் நறுமணம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |