திருமண தடை விலக மருதாணி இலை பரிகாரம்
பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்ற பிறகு பெற்றோர்களின் அடுத்த கனவாக இருப்பது அவர்களின் திருமணம்.ஆனால் காரணம் தெரியாமல் இந்த திருமணம் ஆனது சிலருக்கு தள்ளிக்கொண்டே போகும்.நல்ல வரன் அமைவது போல் வந்து தட்டி கழிந்து விடும்.இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர்.
உண்மையில்,எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ற ஒன்று உண்டு.அப்படியாக மனம் தளராமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து சில பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடி வரும்.
நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் மருதாணி செடியில் அம்பாள் வாசம் செய்கின்றாள் என்று.அப்படியாக திருமணம் தள்ளி போகும் பெண்கள் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு இரண்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஓவ்வொரு அகல் விளக்கிலும் தலா இரண்டு மருதாணி இலைகளை இட்டு தீபம் ஏற்றி மனதார வேண்ட திருமணம் நடந்துவிடும்.
இதை ஐந்து வெள்ளிகிழமைகள் செய்ய வேண்டும் கண்டிப்பாக இந்த பரிகாரங்களை திருமணம் ஆகாத பெண்கள் தான் செய்யவேண்டும் அவர்கள் சார்பாக யாரும் செய்யக்கூடாது.இவ்வாறு செய்து வர திருமணத்தில் ஏதுனும் தோஷம் இருந்தால் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.
திருமண தடையை சந்திக்கும் ஆண்கள் விநாயகருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அகல் விளக்கிலும் தலா இரண்டு மருதாணி இலைகளை போட்டு தீபம் ஏற்றி விநாயகப்பெருமானை மனதார வணங்க நல்ல மண வாழ்க்கையை விநாயகர் பெருமான் அமைத்து தருவார்.
ஐந்து ஞாயிற்று கிழமைகள் செய்யவேண்டும்.திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதை செய்யவேண்டும்.
அவர்கள் சார்பாக வேறு யாரும் செய்யக்கூடாது.இவ்வாறு திருமணம் தள்ளி போகும் ஆண்கள் செய்து வர விரைவில் நல்ல மணப்பெண் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |