ஜோதிடம்: பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

By Sakthi Raj Jun 11, 2026 06:19 AM GMT
Report

வாழ்க்கை என்பது நிறைய அதிசயங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டதாக இருக்கிறது. அப்படியாக, பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையின் குழப்பத்தை தீர்ப்பதற்கு நாம் ஜோதிட ரீதியாக சில ஆலோசனையை பெறுவது உண்டு.

அந்த வகையில் நாம் ஜோதிட ரீதியாக ஆலோசனை பெற்றும் சில பரிகாரங்களை செய்தும் நம் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்து இருக்காது. அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். நம்முடைய வாழ்க்கையில் எந்த நேரங்களில் என்ன நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

அவை உரிய நேரத்தில் கட்டாயம் நம்மை வந்து சேரும். ஆனால் அதற்கு முன்னதாகவே ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று நாம் நினைத்து அதற்காக போராடினால் அவை கைகூடி வராது. அதை போல் நமக்கு நடக்க வேண்டிய விஷயங்களை நாம் தடுக்க நினைத்தாலும் அது முடியாத காரியமாக இருக்கிறது. அப்படியாக, ஒருவருடைய ஜாதகத்தில் திருமண தோஷம் இருக்கிறது.

அவர்கள் பரிகாரம் செய்தும் பயனில்லை என்றால் அவர்களுக்கு எப்பொழுது ஏழாம் வீட்டை பார்க்கக்கூடிய கிரகங்களின் தசா புத்தி நடைபெறுகிறதோ அப்பொழுது அவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். அதோடு, லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவருடைய குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி தனியாக செயல்பட வைக்கும்.

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

அதேபோல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை குறிப்பிட்ட டிகிரி இடைவிடை வேளையில் இருந்தால் அது திருமண வாழ்க்கையில் சில கசப்புகளை கொடுக்கும்.

அதேபோல், ஜாதகத்தில் சனி மற்றும் சந்திரன் இணைந்து இருக்கும் பொழுது அவர்களுக்கு புணர்பு தோஷம் ஏற்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கையில் முடிவெடுப்பதில் குழப்பம், நிச்சயிக்கப்பட்டு பாதியில் திருமணம் நிற்பது போன்ற நிலையை அவர்கள் சந்திக்கிறார்கள்.

அதேசமயம் சுக்கிரன் கேது மற்றும் செவ்வாய் கேது இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரிவினை கொடுத்து விடுகிறது. சந்திரன் சுக்கிரன் இணைவு கொண்டவர்களுக்கு புகுந்த வீட்டில் நிறைய பிரச்சனைகளுக்கு வர வாய்ப்புண்டு.

மேலும் திருமணத்தில் தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US