செவ்வாய் பெயர்ச்சி - தொட்டதெல்லாம் துலங்கப்போகும் ராசிகள்
செவ்வாயால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த ராசியில் ஜூன் வரை இருப்பார். கடக ராசியில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் நல்லதாகா இருக்கும் ராசிகளை பார்ப்போம்.
ரிஷபம்
தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும். இக்காலத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பாக மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான விஷங்களில் சாதகமான பலன்களைப் பெறக்கூடும்.
துலாம்
நல்ல லாபம் கிடைக்கும். வேலைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்ப்க்கள் உள்ளன. கடின உழைப்பாளிகள் தங்கள் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பல வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். அன்றாட வேலை மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல லாபத்துடன், வளர்ச்சி ஏற்படும். காதல் விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமான வழிகள் அதிகரிக்கும்.