ரிஷபத்தில் நுழையும் செவ்வாய்: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

By Vinoja Jun 18, 2026 05:28 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் காலந்தோறும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் அனைத்து ராசிகளினரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், ஜூன் 21 அன்று செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலிருந்து விலகி, சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்குள் நுழைகிறது.

ரிஷபத்தில் நுழையும் செவ்வாய்: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Transit In Taurus Zodiacs Who Get Luck

ஆற்றல், துணிச்சல், செயல்திறன் மற்றும் இலட்சியங்களை குறிக்கும் செவ்வாயின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறித்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபத்தில் நுழையும் செவ்வாய்: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Transit In Taurus Zodiacs Who Get Luck

செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி அடைவதால், பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தானாகவே கூடிவரும்.

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகுவதுடன், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தொடங்குவதற்கும் இது சாதகமான காலமாக அமையும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் செயல்திறன் உயர்ந்து, மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்.

சிம்மம்

ரிஷபத்தில் நுழையும் செவ்வாய்: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Transit In Taurus Zodiacs Who Get Luck

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், தொழில் மற்றும் நிதி துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. 

குறிப்பாக தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.இந்த காலகட்டம் அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கப்போகின்றது.

மகரம்

ரிஷபத்தில் நுழையும் செவ்வாய்: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Mars Transit In Taurus Zodiacs Who Get Luck

மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நிதி ரீதியாக சாதகமான பலன்களை கொடுக்கப்போகின்றது. குறிப்பாக புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.

நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஏற்ற காலமாக இருக்கும்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகள் மற்றும் திட்டங்கள் சுமுகமாக நிறைவேறும்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US