18 ஆண்டுகளின் பின் கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், பெப்ரவரி மாதத்தில் 18 ஆண்டுகளின் பின்னர் கும்ப ராசியில் நிகழவுள்ள சுக்கிரன், செவ்வாய் சேர்க்கையால் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

இருப்பினும் இந்த அரிய சேர்க்கையால் பெரியளவில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

மகர ராசியின் 2வது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இடம்பெறவுள்ளமையால் இவர்களின் நிதி நிலையில்,எதிர்பாராத உயர்வு காணப்படும்.
தொழில் துறையில் அபார வளர்ச்சி ஏற்படும். இவர்களுக்கு பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்காக வாய்ப்புகள் கூடிவரும்.
மிதுனம்

மிதுன ராசியின் 9வது வீட்டில் இந்த அரிய செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், பெப்ரவரி மாதத்தில் இந்த ராசியினருக்கு பணவரவு கிடைப்பதற்கான வாயப்புகள் கூடிவரும்.
தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இது அமையும். பணியில் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன், குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4வது வீட்டில் இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், இந்த ராசியினர் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் அளவுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த கால மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டடு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் சூழ்நிலை உருவாகும்.
எதிர்பார்த்த வகையில், பணபரிசு அல்லது பிடித்த பெருள் பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது. இவர்களின் நிதி நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு பெரிய மாற்றம் நிகழும்.