இன்றைய ராசி பலன்(01-05-2025)
மேஷம்:
இன்று பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் ஆபத்துகள் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
நீண்ட நாட்களாக உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கை பயணித்திற்கான புதிய வழி பிறக்கும்.ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
மிதுனம்:
இன்று மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு எந்த செயலும் செய்ய வேண்டாம். ஒரு சிலருக்கு குடும்பத்தில் பெரிய பிரச்சனை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
காலை முதல் மனதில் எதிர்காலம் பற்றிய கவலை வரும். வெளி வட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வியாபாரத்தில் உங்களுக்கான எதிரிகள் விலகி செல்வார்கள்.
சிம்மம்:
உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி:
உங்கள் பணியில் சில தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான பெயர் உயரும். பொருளாதார விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
துலாம்:
பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு உண்டாகும் தடைகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி வழங்கும்.
விருச்சிகம்:
பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மனதில் சஞ்சலம் உண்டாகும். உறவினர்கள் இடையே சில கருத்துவேறுபாடுகள் உண்டாகலாம்.
தனுசு:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தில் உண்டான கருத்து வேறுபாடுகள் விலகி மனதில் நிம்மதி உண்டாகும். சகோதரன் வழி உறவால் நல்ல ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கும்பம்:
நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். உங்கள் முயற்சி தள்ளிப்போகும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
மீனம்:
இன்று வேலையில் விழிப்புடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும். உறவினர்கள் இடையே கவனமாக இருக்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |