இன்றைய ராசி பலன்(20-05-2025)
மேஷம்:
இன்று மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் வளரும். இன்று பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவர்கள் தியானம் மற்றும் யோகம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ரிஷபம்:
எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் பதட்டமும் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். மனதில் தெளிவு பிறக்கும்.
மிதுனம்:
இன்று உங்கள் நோக்கம் அனைத்தும் நிறைவேறும். மனதில் நேர்மறை சிந்தனை பெருகும். சிலர் முடிந்த அளவு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தெளிவான சிந்தனை உறவுகளை மேம்படுத்தும்.
கடகம்:
குடும்பத்துடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இது உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். மன அமைதிக்காக உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
சிம்மம்:
இன்று உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் உங்களுக்கான நற்பெயர் உண்டாகும். சிலருக்கு குழந்தைகளின் உடல் நிலையில் சிறு சிறு சங்கடங்கள் உருவாகும். மதியம் மேல் கவனம் தேவை.
கன்னி:
இன்று குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனை ஒண்டன்று நடக்கும். சகோதரன் சகோதிரி வாக்கு வாதம் உண்டாகும். முடிந்த வரை நீங்கள் எதிலும் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
துலாம்:
இன்று நீங்கள் எதிர்பாராத உறவு ஒன்று உங்களை தேடி வரும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் பயணம் ஆதாயத்தை கொடுக்கும். மனம் நிறைவு பெரும்.
விருச்சிகம்:
பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும், மேலும் நீங்கள் செய்யும் வேலையின் தரம் உங்கள் அங்கீகாரத்தை அதிகரிக்கும். உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.
தனுசு:
இன்று நீங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். குடும்பத்தில் எதிர்பாராத சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று நடைப்பெறும். விருப்பங்கள் நிறைவேறும்.
மகரம்:
இந்த நேரம் உங்கள் கடின உழைப்பின் பலனையும் தரக்கூடும், எனவே உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். உங்கள் சமூக வாழ்க்கையிலும் ஒரு பரபரப்பு ஏற்படும். இன்று உங்களுக்கு புதிய சாத்தியங்களை உருவாக்கும்.
கும்பம்:
உங்கள் சமூக வாழ்க்கையிலும் ஒரு பரபரப்பு இருக்கும், இது புதிய தொடர்புகளை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மன அமைதியாக தியானம் அல்லது யோகா செய்ய சிறிது நேரம் செலவிடுங்கள்.
மீனம்:
புதிய நபர்களுடைய நட்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இன்று உங்களின் சமநிலையான உணர்வால் எதையும் சாதிப்பீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |