2026: குரு பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் அந்த 3 ராசிகள் யார் ?
ஒவ்வொரு வருடமும் குருபகவான் அவருடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அப்படியாக 12 வருடங்கள் ஒரு முறை குருபகவான் தன்னுடைய உச்ச ராசியான கடக ராசிக்கு செல்கிறார். குரு பகவான் உடைய இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவு மாற்றங்களை கொடுக்கும்.
அந்த வகையில் பராபவ வருடத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 26/5/2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு உச்சம் பெறுகிறார். இதனால் கட்டாயமாக எல்லோருக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் 5, 7, 9 வீடுகளில் அவருடைய பார்வை விழுகிறது.
அதாவது விருச்சிகம், மகரம், மீன ராசிகளில் இவர்கள் குருபகவானின் பார்வை உள்ளதா இவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு குருபகவானுடைய இந்த பெயிற்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றும் மாற்றமும் தரக்கூடியதாக இருக்கிறது.
உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் இவர்கள் இந்த காலகட்டங்களில் பெறுவார்கள். இவர்களுடைய பேச்சு இனிமையாக இருக்கும். செய்யும் வேலைகளில் நிதானமாகவும் எதையும் யோசித்து செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மாணவர்களுக்கு இந்த காலகட்டங்களில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் தடையின்றி நடக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வீட்டில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். அவர்களுடைய பிள்ளைகளால் பெயரும் புகழும் கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியும் நினைத்த லாபமும் பெறுவீர்கள்.
வெளிநாட்டு தொடர்பான வர்த்தக விஷயங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அடி வயிறு மற்றும் முதுகு பிரச்சனை வரலாம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலனை அளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கிறது. வீண் ரோஷம் தவிர்த்து குடும்பத்தில் நல்ல சுமுகமான உறவை பேணுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியவர்களின் வார்த்தைகளை கேட்டு சுபகாரிய நிகழ்ச்சிகளை தடையில்லாமல் நடத்துவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |