இன்றைய ராசி பலன்(04-05-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகம் வரலாம். உறவுகளுக்கு மத்தியில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகலாம்.

ரிஷபம்:

உங்கள் வருமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். எதையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்து செயல்படுவதால் நன்மை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் உங்கள் மனதில் உள்ள ஆசை நிறைவேறும். 

மிதுனம்:

கடந்த காலங்களில் செய்த தவறை எண்ணி மனம் வருந்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் பெயருக்கு ஆபத்துகள் உண்டாகலாம். சிலருக்கு குடும்பத்தில் மன அமைதியை இழக்க நேரிடலாம்.

கடகம்:

காலை முதல் பதட்டமான நிலையில் காணப்படுவீர்கள். சிலருக்கு உறவினர்கள் வழியாக வந்த பிரச்சனைகள் விலகி செல்லும். இறைவழிபாடு மிக சிறந்த பலன் கொடுக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.

சிம்மம்:

பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை மதியம் வரை சந்திக்கக்கூடும். தாயிடம் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றி கொள்வதால் வெற்றிகள் கிடைக்கும்.

கன்னி:

எதிர்காலம் பற்றிய பயமும் பதட்டமும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கவலைகள் படிப்படியாக விலகும். இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவை பெரும்.

துலாம்:

தொழிலில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் விலகி செல்லும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் மனதில் தெளிவும் பிறக்கும்.

விருச்சிகம்:

இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். பெரியோரின் உதவி கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர்.

வெள்ளிக்கிழமையில் துளசிக்கு பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளிக்கிழமையில் துளசிக்கு பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தனுசு: 

நீங்கள் நீண்ட நாட்களை எதிர்பார்த்த விஷயங்களை அடைவீர்கள். வெகு நாட்களாக மனதை வருடிய விஷயம் உங்களை விட்டு விலகும். இன்று எதிலும் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

மகரம்:

நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

கும்பம்: 

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வரவு வரும். செயல் வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

மீனம்:

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தொலை தூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக சொத்தில் உண்டான ஆபத்துகள் விலகும். தக்க சமயத்தில் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US