இந்த 5 கனவுகள் உங்களுக்கு வருகிறதா?அப்போ கவனமாக இருங்கள்
மனிதனுக்கு கனவுகள் என்பது மிகவும் இயல்பான ஒன்று.அவை நம்முடைய எண்ண அலைகளுக்கு ஏற்ப கனவாக பிரதிபலிக்கிறது.அப்படியாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை.இருந்தாலும் சில நிகழ்வுகள் பலருக்கும் ஒரே போல் கனவுகளாக வருவதை கவனிக்க முடியும்.
அப்படியாக அந்த கனவுகள் ஏன் வருகிறது?நாம் அவ்வாறு வரும்பொழுது என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
1.ஒரு சிலருக்கு வெகு காலமாக யாரோ ஒருவர் அவர்களை துரத்துவது போல் கனவு வந்து கொண்டு இருக்கும்.இதற்கு காரணம் ஆழ்மனதில் பயம்.உங்களுக்கான பிரச்சனைகளை உங்களால் சமாளிக்க முடியாமல்,பயம் கொள்வதால் வரும் வெளிப்பாடுகள்.ஆக நிதானம் அடைந்து எல்லாம் சரி ஆகும் என்று நம்பிக்கையோடு செயல்பட்டால் ஆழ்மனம் அமைதி பெரும்.இவ்வாறு கனவுகள் வருவதும் குறையும்.
2.சிலருக்கு பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் அடிக்கடி கனவுகள் வரும்.காரணம்,இவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.உதவிக்கு யாரும் இல்லை என்ற பயம் வாட்டுவதால் இவ்வாறன கனவுகள் வருகிறது.
3.இன்னும் சிலருக்கு காரணமே இல்லாமல்,எதையாவது தவற விடுவது போல் கனவுகள் வரும்.காரணம்,அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை தவறு விட்டு இருப்பார்கள்.அந்த இழப்பு அவர்கள் ஆழ்மனதில் பதிந்து இவ்வாறான கனவுகள் வர காரணமாக இருக்கிறது.
4.சிலருக்கு பள்ளி படிப்பை முடித்து நீண்ட காலமாக ஆகியும்,அவர்களுக்கு பள்ளி பரிட்சையில் தோல்வி அடைவது போல் கனவுகள் வரும்.காரணம்,அவர்கள் பள்ளியில் நன்றாக படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று நினைத்து சில கால சூழ்நிலையால் அதை தவறவிட்டுருக்கலாம்.அந்த வடு மறையாமல் அவர்களுக்கு இவ்வாறான கனவுகள் வரும்.மேலும்,இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய அதிக பயம் இருப்பதாலும் இவ்வாறு கனவுகள் வரலாம்.
5. உங்களுடைய பல் கீழே விழுவது போல கனவு கண்டால் அல்லது வாயில் ஏதோ ஒரு பல் இல்லாத மாதிரி கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாகப் பொருள். நீங்கள் பயத்திலும், கவலையிலும் பாதுகாப்பின்மையாகவும் இருப்பதாக அர்த்தம்.
ஆக இந்த மாதிரியான கனவுகள் வரும் பொழுது கொஞ்சம் நிதானமாக யோசித்து,உங்களுக்கு வரும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்று தைரியமாக சிந்தித்தால் போதும்.எல்லாம் சரி ஆகிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |