நாளை பெண்கள் கட்டாயம் இருக்கவேண்டிய திருவாதிரை விரதம்
தமிழ் மாதம் பன்னிரண்டில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும்.அப்படியாக நாளை மார்கழி 26 ஆம் நாளில் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் உள்ள கர்மவினைகள் விலகி நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களுடைய கணவனின் உடல்நலம் வேண்டியும்,தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் வேண்டியும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிவபெருமானின் அருளால் அவர்களுக்கு கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதாவது திருவாதிரை நாளில் விரதம் இருந்து இரவு முழிவதும் இரவில் முழு நிலவை கண்டு வணங்க வேண்டும். அதே போல் இந்நாளில் தாலி சரடு மாற்றிக்கொள்வது சிறந்த பலனை தரும்.குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்பாக பெண்கள் தங்களுடைய தாலி சரடை மாற்றி கொள்ளவேண்டும்.
தாலி சரடு மாற்றும் பொழுது காட்டாயம் கணவன் அருகில் அமர்ந்து இருக்க வேண்டும். மேலும் விரதம் முடிக்கும் பொழுது 18 காய்கறி சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு வகைகள் சமைத்து பூஜை செய்து விரதம் முடிப்பது நல்லது.
அதே போல் விரதம் முடிக்கும் பொழுது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.இது கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்தும்.பிறகு மனைவி கணவனிடம் ஆசீர்வாதம் பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து கொள்வது மனமகிழ்ச்சியை கொடுக்கும்.
அதோடு,யாரெல்லாம் இந்த விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சிவன் பார்வதி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
மேலும்,அன்றைய தினத்தில் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனத்தை குடும்பமாக சென்று வணங்கினால் அப்பன் ஈசன் அருட்பார்வை உங்கள் குடும்பம் மீது எப்பொழுதும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |