மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஏப்ரல் மாத உண்டியல் வசூல்: இத்தனை கோடிகளா?
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெளி மாநிலத்தவர்கள் உட்பட ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், தமிழகத்திற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களின் பட்டியலிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய இடம் பிடித்திருக்கும்.
இப்படி மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தினசரி தரிசனத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார்பாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தப்படுகிறது.
இப்படி பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கோவில் நிர்வாகம் சார்பாக எண்ணப்படுகிறது.
அந்தவகையில், உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த இந்நிகழ்வால் மதுரை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டியிருந்தது.
இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 10 உப கோவில்களின் ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விபரங்களைக் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், "உண்டியல் வருமானமாக 1 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்தி 504 ரூபாய் ரொக்கப்பணம், 819 கிராம் தங்கம், 642 கிராம் வெள்ளி மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 251 ஆகியவை காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |