கோடி கோடியாக செல்வம் சேர ஒரு முறை காண வேண்டிய தரிசனம்
சிவன் கோயில்களில் கட்டாயம் இரவு நடை சாத்தும் பொழுது பள்ளி அறை பூஜை நடைபெறுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு இரவும் சுவாமியையும் அம்பாளையும் ஒரு சேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜை செய்வார்கள்.
இந்த பள்ளி அறை பூஜை காண்பது நமக்கு மிக பெரிய அதிர்ஷ்டமும் நன்மையையும் வழங்குகிறது. அனைவரும் கட்டாயம் அவர்கள் வாழ்நாளில் இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது அவசியம் என்கிறார்கள்.
எல்லா சிவன் கோயில்களிலும் பள்ளியறை விஷேசம் என்றாலும், மிக முக்கியமாக மதுரை ஆளும் அரசி அம்மா மீனாட்சி மற்றும் சொக்கநாதனின் பள்ளி அறை பூஜை தரிசனம் செய்வது நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் எல்லாம் விலகி செல்வம் பெருகும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
குடும்பம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆந்த குடும்பம் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருந்தால் தான், வாழ்க்கையில் எல்லா செயல்களையும் மகிழ்ச்சியாக செய்யமுடியும்.
அப்படியாக, சுவாமி மற்றும் அம்பாளின் ஒற்றுமையை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை நிலவுவதோடு, குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கிடைக்காதது.
பிறகு, இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை கொண்டு வரப்படும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி அதாவது மூக்குத்தி தீபாராதனை நடக்கிறது.
இங்கு நாம் அம்மனின் மூக்குத்தியின் அழகை காணும் விதமாக உள்ளே பொருட்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு பூஜையின் பொழுது மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.
அதோடு அம்மா மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தியை தரிசனம் செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கிறது. மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடும்.
இந்த பள்ளியறை பூஜையில் யார்வேண்டுமாலும் கலந்து கொள்ளலாம். குறிப்பாக நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மற்றும் திருமண தடை சந்திப்பவர்கள் கட்டாயம் மீனாட்சி சொக்கநாதன் பாள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள அவர்களுக்கு விரைவில் அம்மனின் அருளால் அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
மேலும், பள்ளியறை பூஜைகளுக்கு நம்மால் இயன்ற பொருட்களை கொடுப்பவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள துன்பம் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |