நினைத்தது அனைத்தும் நிறைவேற கண்ணாடி வழிபாடு
சிலருக்கு எப்பொழுதும் எது ஆசைப்பட்டு நினைத்தாலும் அது உடனே நடக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் முயற்சிகள் எடுத்தாலும் அந்த ஆசைகள் நிறைவேறாமலேயே சென்று விடும்.
அந்தவகையில், நினைத்தது அனைத்தும் நிறைவேற மிகவும் எளிமையான முறையில் கண்ணாடி வழிபாடு செய்தால் போதும்.
நினைத்தது நடக்க கண்ணாடி வழிபாடு
முதலில் ஒரு பெரிய கண்ணாடியை வாங்கிக்கொண்டு வரவும்.
புதிதாக வாங்கி வந்த கண்ணாடியில் சிறிது விபூதி தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு சுத்தமான வெள்ளை துணியை வைத்து ஒரு முறை துடைத்து கிழக்கு பார்த்தவாறு கண்ணாடியை மாட்டி திரை ஒன்று போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த கண்ணாடியை படுக்கையறையை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
இரவு நாம் உறங்கி காலையில் கண்விழித்தவுடன் நேராக இந்த கண்ணாடி இருக்கும் அறைக்கு வந்து கண்ணாடிக்கு முன் அமர்ந்து கண்ணாடி திரையை விலக்க வேண்டும்.
பிறகு கண்ணாடியை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை நிறைவேறி விட்டது போல் 11 முறை கூற வேண்டும்.
உதாரணமாக பணக்கஷ்டம் என்னும் பட்சத்தில் என்னுடைய தேவைகள் பூர்த்தியாகும் அளவிற்கு பணம் வந்து விட்டது என்று கூறவேண்டும்.
இதனை தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த முறையில் நாம் கூறும்பொழுது நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறிவிடும்.
48 நாட்களில் வரும் பௌர்ணமி சமயத்தில் மட்டும் மற்ற நாட்களில் எத்தனை முறை கூறினோமோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக கூற வேண்டும்.
அந்தவகையில், கண்ணாடியை வைத்து எளிமையான இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது விரைவிலேயே நம்முடைய வேண்டுதல்களும், ஆசைகளும் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |