கந்த குரு கவசம் படிக்கும் பொழுது தவறியும் இந்த தவறுகள் செய்து விடாதீர்கள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் நம்முடைய துயர் துடைப்பவர். அதுமட்டுமல்லாமல் முருக பெருமானுடைய மந்திரங்களை ஒருவர் மனதார அமர்ந்து பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு முருகப்பெருமானுடைய முழு அருள் கிடைப்பதை அவர்கள் காணலாம்.
அந்த வகையில் கலியுகத்தில் கந்த குரு கவசம் ஏன் மகா மந்திரமாக கருதப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். கந்த குரு கவசம் என்பது கலியுகத்தில் மனிதர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்களில் இருந்து விலகி அவர்களுக்கு நல் வாழ்க்கையை வழங்கக்கூடிய அற்புதமான மந்திரமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் கந்தகுரு கவசம் படிக்கும் பொழுது நம்முடைய தோஷம் யாவும் விலகும். பொதுவாக, மந்திரம் என்பது நம்முடைய ஆழ் மனதில் விதையாக விழுந்து பிறகு காலப்போக்கில் நமக்கு மனதில் தெளிவையும் மன வலிமையையும் கொடுக்கிறது.
ஆக, நாம் மந்திரங்களை பாராயணம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களை பெறுவதற்கு சில கால தாமதங்கள் ஆகுவது இயல்பான காரியம்தான். ஆனால் கைவிடாமல் நாம் மந்திரங்களையும் வழிபாடுகளையும் செய்து வரும்பொழுது நாம் நினைத்த இலக்கை அடைந்து விடலாம்.
மேலும், கந்த குரு கந்த குரு கவசம் படிக்கும் பொழுது நம்முடைய அகங்காரத்தையும் மனதில் உள்ள அழுக்குகளையும் நம் முன் பிறவியில் செய்த பாவங்களையும் அடியோடு அழித்து நமக்கு ஞானத்தை வழங்க கூடியதாக இருக்கிறது.
மேலும், கந்த குரு கவசம் படிக்கும் பொழுது நாம் தவறியும் ஒரு சில தவறுகளை செய்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.