வாஸ்து: வீட்டில் செல்வம் பெருகி, கடன் நீங்க மணி பிளான்ட்
மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும்.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் செடியாகும்.
பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என பலரது நம்பிக்கை.
பணம் பெருக உதவும் மணி பிளான்ட்டில் இருவகைகள் உள்ளன. அதில் முதல் வகை அசல் மற்றொறு வகை போலி.
பழைய சீனி அல்லது இந்திய நாணயங்களைப் பயன்படுத்தி போலி நாணய காயின் செடிகளும் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
அசல் காயின் செடி இருந்தால், காய்ந்த இலைகளை துண்டித்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி சரியான பராமரிப்பு இருக்க வேண்டும்.
மணி பிளான்ட்டை வசதிக்கேற்ப வீடு மற்றும் அலுவலகத்திலும் வைத்து அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும்.
அதாவது, வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை கிழக்கு திசையில் நட வேண்டும் என்கிறார்கள்.
மேலும், படுக்கையறையை அலங்கரிக்கவும், அழகுபடுத்தவும் மணி பிளான்ட் செடியை வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக, வீட்டில் மணி பிளான்ட் செடியை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |