பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, உடல் தோற்றம், நிதி ஆகியவற்றில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை நொடியில் ஈர்கும் கொள்ளை அழகுடன் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்களாம். அப்படி மயக்கும் அழகுடன் பிறந்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் - ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே வசீகர தன்மையுடன் இருப்பார்கள்.
இவர்களை ஒரு முறை பார்த்தால் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அழகுடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சிறந்த பேச்சாற்றல் நிறைந்திருக்கும்.
நீண்ட இளமையுடனும் இருக்கும் இந்த ராசி பெண்கள் ஆண்களை நொடியில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் வித்தியாசமாக குணங்கள் நிறைந்திருக்கும்.
மிதுனம் - மிதுனம் ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் ஒளிவட்டத்தைச் சுற்றி எப்போதும் இளமைப் பொலிவைக் கொண்டிருப்பார்கள், இது அவர்களுக்கு பிரகாசமான சருமத்தையும் மென்மையான அம்சங்களையும் தருகிறது.
இந்த ஒளிவட்டப் பொலிவின் காரணமாக, அவர்கள் தங்கள் ஒளிவட்டப் கவர்ச்சியால் தங்களின் உண்மையான வயதை விட மிகவும் இளமையாகத் தெரிகிறார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் கூட்டத்தில் இருந்தாலும் அவர்களின் தனித்துவமான ஈர்க்கும் அழகால் தனித்து விளங்குவார்கள். இவர்கள் ஆண்களை ஈர்ப்பதில் பெயர் பெற்றர்களாக இருப்பார்கள்.
கடகம் - இந்த ராசியில் பிறந்த பெண்கள் அவர்களின் புன்னகையால் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருப்பார்கள். மேலும் அவர்களின் இருப்பை தொடர்புபடுத்தக்கூடியதாகவும் கவர்ச்சிகரமான தோற்றமும் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இந்த ராசி பெண்கள் பிறப்பிலேயே மயக்கும் அழகுடையவர்களாக இருப்பார்கள். இவர்களை முதல் பார்வையிலேயே மற்றவர்களுக்கு பிடித்துவிடும்.
இவர்களிடம் இனம் புரியாத வசீகர தன்மையும் பார்வையில் காந்த ஆற்றலும் இயல்பாகவே இருக்கும். இவர்கள் ஆண்களை கண்ணிமைக்கும் நொடியில் கவர்ந்துவிடுவார்கள்.