பிறக்கும் போதே புத்திசாலியாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Fathima
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும், சிலர் மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபராகவும், சிலர் அதிர்ஷ்டத்துடனும் பிறந்திருப்பார்கள்.
ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் பன்முகத்தன்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகள், படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் கலைநயமிக்கவர்கள். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கும்பம்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே பலவிதமான திறமைகள் இருக்கும்.
- மற்ற ராசிகளை போன்று அல்லாமல் தீவிரமாக ஒரு செயலில் ஈடுபடுவார்கள், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை செயல்படுத்தவும் ஆர்வம் காட்டுவார்கள்.
- கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய கும்ப ராசியினர், புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றுத்தேர்ந்து அதை செயல்படுத்தவும் முயற்சிகளை எடுப்பார்கள்.

தனுசு
- நெருப்பு ராசியான தனுசு ராசிக்காரர்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள்.
- ஆன்மீகம், மருத்துவம், சட்டம் மற்றும அரசியல் தொடர்பான துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
- அரசியல் தலைவர்களாக, வழக்கறிஞர்களாக, பேச்சாளர்களாக வலம்வரும் திறமையுடன் மக்களை எந்தவிதத்தில் ஈர்க்கலாம் என்ற ரகசியத்தை அறிந்தவர்கள் என்றே கூறலாம்.
- இதுதவிர தங்களது செல்வாக்கால் திறமையால் செல்வத்தை குவிக்கும் ராசியினரும் இவர்களே, பணக்காரர்களாகவும் திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சிம்மம்
- மற்றொரு நெருப்பு ராசியான சிம்ம ராசியினர் தனித்துவமாக தங்களது திறமையை வெளிப்படுத்தவே விரும்புவார்கள்.
- இயல்பாகவே இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், விளையாட்டு வீரர்களாக, கலைநயமிக்கவர்களாக திகழ்வார்கள்.
- இந்த ராசியில் பிறந்தவர்கள் நடிகர்கள், நடனக்கலைஞர் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கலாம்.
- மிக முக்கியமாக உடல் வலிமை மற்றும் புத்திசாலித்தனம் மிக்கவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.
- தானும் வளர்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் வளரவைக்க வேண்டும் என்ற முனைப்பும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

மீனம்
- மற்ற ராசிகளில் மிகவும் வேறுபட்ட ராசியினரான மீனம் ராசியினர் எழுத்து, இசை மற்றும் கலைகளில் ஆர்வமிக்கவர்கள்.
- திறமையான நடிகர்களாகவும், கலைஞர்களாகவும் இருப்பார்கள்.
- ஏனெனில் இவர்கள் மாறுவேடங்களை ஆராய்வதையும், வேடங்களில் நடிப்பதையும் விரும்புகிறார்கள், படைப்புகளில் கவனம் செலுத்துவதை விரும்புகிறார்கள்.
- புதிர்களை தீர்க்கக்கூடியவதில் வல்லவர்களான மீன ராசியினர், மாயைகளில் உலகத்தை ஆராய்வதை விரும்புகிறார்கள்.
- தியானம் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்களாக இருக்கலாம்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US