தீராத துன்பம், வறுமை நீங்கள் பாட வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ்
முருகப்பெருமானின் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழானது இன்றளவும் இல்லை இந்த உலக அழியும் வரை நிலைத்திருந்து பக்தர்களை காக்கக்கூடிய கவசகமாகவே இருக்கும். அப்படியாக திருப்புகழில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
அந்த திருப்புகழை நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு கஷ்டம் நேரும் பொழுது அதற்குரிய பாடலை பாடினால் நிச்சயம் முருகப்பெருமானுடைய அருளால் உங்கள் வாழ்வில் நடக்கின்ற அதிசயத்தை நீங்கள் காணலாம்.
மேலும் திருப்புகழின் சிறப்பு என்னவென்றால் இந்த திருப்புகழை நாம் பாராயணம் செய்ய தொடங்கும் பொழுது நம் உடலில் ஒரு விதமான நல்ல அசைவுகள் உருவாகுவதை கவனிக்கலாம். அதாவது, நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் என்பது படிப்படியாக வெளியே விலகுவதை உணரலாம்.

அந்த வகையில் ஒருவருக்கு தீராத துன்பம் இருக்கிறது, உடலில் அடிக்கடி ஆரோக்கிய குறைபாடுகள் வருகிறது, கணவன் மனைவி இடையே ஒற்றுமை இல்லை, சமுதாயத்தில் அவமானங்களை சந்திக்கிறீர்கள் என்றால் மனம் வருத்தமடையாமல் நிச்சயம் இந்த திருப்புகழை நீங்கள் பாராயணம் செய்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கின்ற அத்தனை துயரங்களும் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
பாடவேண்டிய திருப்புகழ்:
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்,
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

நீங்கள் தினமும் இந்த பாடலை பாராயணம் செய்ய முருகப்பெருமான் அவருடைய மயில்மீது வந்து உங்களை காத்தருள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக நிச்சயமாக நம்பிக்கையோடு இந்த பாடலை பாராயணம் செய்யுங்கள். கட்டாயம் முருகப்பெருமான் கைவிடமாட்டார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |