எதிரிகளை வீழ்த்திய முருகனின் திருப்புகழ்
முருகன் அவனை மனதில் நினைத்தாலே போதும், கவலைகள் பறந்தோடும்.
வெற்றிவேலவன் அவன் அறிவில் சிறந்தவன், நியாயத்தின் தலைவன், அவன் பக்தர்கள் துன்புற அங்கு அவன் வரும் முன் அவன் வேல் வந்து அவர்களை காப்பாற்றும்.
அவ்வளவு அன்பானவன் அப்பன் முருகன். அப்படியாக, ஒருமுறை அருணகிரிநாதர் திருத்தணி மலையை சுற்றி வர அவரின் பெருமையறியாத சில பேர் கேலி செய்தனர்.
அதனால் மிகவும் மன வருந்திய அருணகிரிநாதர், நின் புகழ் பாடும் அடியாரை இவர்கள் இவ்வளவு துன்புறுத்துவது சரிதானோ? சொல் ஈசனே!
வெந்து கிடக்கும் மனதின் அனலை குளிர வைக்க என் கண்ணீரும் தவிக்கின்றதே ?அடியாரை காயப்படுத்திய இவர்களை அழிப்பதற்கு வேறு ஒரு நெருப்பு வேண்டுமோ?
உன் திருப்புகழே நெருப்பாய் மாறி இவர்களை நீறாக்கும் என்று இந்த திருப்புகழை பாடினார்.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே!!!!.
அதாவது திருப்புகழின் விளக்கம் என்னவென்றால்,
என் அப்பன் முருகனின் பிள்ளைகளை அவனின் அடியர்களாகிய எங்களை ஏளனம் செய்து,அவர்களை துன்பத்தில் ஆழ்த்துபவர்கள் அழிந்து போவார்கள்.
சூரர்களை அழித்து தனது அடியார்களை காக்க திருத்தணி மலை மீது குறத்தியாகிய வள்ளிதேவானையுடன் எழுந்தருளி இருக்கும் முருகா வெந்த என் மனதிற்கு பதில் சொல் என்று இத்திருப்புகழை பாட , அனைவரையும் நெருப்பு சுட்டு விரட்டியது.
பிறகு ஓடி வந்து அருணகிரிநாதரிடம் சரண் அடைந்தார்கள். மேலும், இத்திருப்புகழை சித்தி தரும் திருப்புகழ் என்பர்.
அதாவது, இத்திருப்புகழை முருகப்பெருமான் முன் நின்று படிப்பவர் மனதில் நினைத்தது நடக்கும் என பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |