முருகப்பெருமான் இந்த ஒரு பாடலை பாடினால் தீராத பிரச்சனைகள் தீரும்

By Sakthi Raj Feb 20, 2026 04:02 AM GMT
Report

மனிதர்கள் வாழ்க்கையில் துன்பம் என்பது மிகச் சாதாரணமாக நம்மை தொட்டு செல்லக் கூடியதாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை மனரீதியாக கொடுத்துவிடும். அந்த நேரங்களில் என்னதான் நெருங்கியவர்கள் உடன் இருந்தாலும், மிகப்பெரிய துணையாக கடவுளையே மனம் தேடுகிறது.

அப்படியாக தீராத துன்பமும் தலைக்கு மேல் இருக்கக் கூடிய பிரச்சனைகளும் தீர பாட வேண்டிய சக்தி வாய்ந்த முருகப்பெருமான் பாடலை பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமான் இந்த ஒரு பாடலை பாடினால் தீராத பிரச்சனைகள் தீரும் | Murugan Mantras To Overcome Struggles In Life

சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

பாடல்:

கொள்ளித் தலையில் எறும்பு அதுபோலக் குலையும் என்றன்,
உள்ளத் துயரை ஒழித்து அருளாய் ஒருகோடி முத்தம்,
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே,
வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே.

முருகப்பெருமான் இந்த ஒரு பாடலை பாடினால் தீராத பிரச்சனைகள் தீரும் | Murugan Mantras To Overcome Struggles In Life

ருத்ராட்சத்தை தவறியும் இந்த நிற நூலில் மட்டும் அணியாதீர்கள்

ருத்ராட்சத்தை தவறியும் இந்த நிற நூலில் மட்டும் அணியாதீர்கள்

விளக்கம்:

அதாவது இரண்டு பக்கங்களும் எரியக்கூடிய நெருப்புக்கு இடையே இருதலை கொள்ளி எறும்பு போல் வெளிவர முடியாமல் பல துன்பங்களுக்கு இடையே துன்பப்படும் என்னை காத்து அருள வேண்டும்.

அந்த திருச்செந்தூரில் கடல் அலைகளுக்கு நாயகனாக விளங்கக்கூடிய முருகப்பெருமானே, வள்ளி மனதை ஆட்கொண்ட கந்தனே, என் துயரெல்லாம் துடைத்து அருள வேண்டும் என்பது இந்த பாடலில் விளக்கம் ஆகும்.

கந்தர் அலங்காரத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஒரு பாடலை தினமும் நாம் பாராயணம் செய்து வந்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பத்திலிருந்து ஒரு விடுதலையை முருகப்பெருமான வழி வகுப்பார். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US