கந்த சஷ்டி ஏழாம் நாள்: சொல்ல வேண்டிய மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும்!
முருகப்பெருமாள் வழிபாடுகளில் கந்த சஷ்டி விரத வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அப்படியாக கந்த சஷ்டி விரதத்தின் ஏழாம் நாள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண வைபவத்தை வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமாக இருக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் சூரசம்காரம் நவம்பர் 15 ஆம் தேதி அன்றும், திருக்கல்யாணம் நவம்பர் 16ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
ஏழாம் நாளின் சிறப்பு:
முருகப்பெருமானை ஆறு நாட்கள் வழிபாடு செய்த பிறகு சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு ஏழாம் நாள் முருகப்பெருமான் தெய்வானை திருமண வைபவத்தை வழிபாடு செய்வது சிறப்பு. இந்த வழிபாடு கணவன் மனைவி இடையே ஒற்றுமை, மன அமைதி உண்டாக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அப்படியாக, ஏழாம் நாள் அதிகாலை எழுந்து குளித்த நீராடி பூஜை அறையை சுத்தம் செய்து முருகப்பெருமான் திருஉருவ படத்திற்கு அல்லது சிலைக்கு சந்தனம், குங்குமம் வைத்து சிவப்பு மலர்கள் செவ்வரளி மல்லிகை போன்றவற்றால் அலங்கரிக்கலாம். முருகப்பெருமானுக்கு நெய் வைத்தியமாக பால், பழங்கள், பஞ்சாமிர்தம், பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.
பிறகு முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனை செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
முடிந்தவர்கள் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு நடக்கக்கூடிய திருக்கல்யாணம் வைபவத்தை தரிசனம் செய்யலாம், முடியாதவர்கள் வீடுகளில் முருகன்படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து திருக்கல்யாணத்தை மனதில் நினைத்து வழிபாடு செய்யலாம்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
வழிபாட்டின் பொழுது முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். அதிலும், கீழ்க்கண்ட எளிய மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.
ஓம் சரவணபவ!
ஓம் சுப்ரமண்யாய நமஹ!
ஓம் வள்ளி தேவசேனா சமேத சண்முகாய நமஹ!

இந்த மந்திரங்களோடு சேர்ந்து கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்றவற்றையும் பாராயணம் செய்யலாம். விரதம் நிறைவு செய்வது எப்படி? ஆறு நாட்கள் மட்டும் விரதம் இருப்பவர்கள் சூரசமஹாரத்துடன் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆனால், ஏழு நாட்கள் விரதம் இருப்பவர்கள் திருக்கல்யாண உற்சவத்திற்கு பிறகு நிறைவு செய்து கொள்வது வழக்கம்.
அவ்வாறு விரதம் நிறைவு செய்யும் பொழுது ஏழாவது நாள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று திருக்கல்யாண வைப்பவத்தை தரிசனம் செய்யலாம். தரிசனத்திற்கு பிறகு குடும்ப வழக்கத்தின் அடிப்படையில் பால், பழங்கள் அல்லது எளிமையான சைவ உணவுடன் பாரணை செய்யலாம்.
இருப்பினும் ஒவ்வொருவருடைய உடல் நலத்திற்கு ஏற்ப அவர்கள் உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
திருக்கல்யாண தரிசனம் பயன்:
ஏழாம் நாள் முருகப்பெருமான் திருக்கல்யாணம் தரிசனம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் முடிந்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். அன்னதானம் போன்ற நற்செயல்களிலும் ஈடுபடலாம்.
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |