பிரிந்த சென்ற கணவன் மனைவி ஒன்று சேர பாட வேண்டிய திருப்புகழ்
By Sakthi Raj
கணவன் மனைவி என்றாலே பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்படியாக சிலர் வீட்டில் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் எத்தனை பரிகாரம் செய்தாலும் அந்த சண்டைகள் தீர்ந்து போவதாக இருக்காது. நேரங்களில் அவர்கள் பிரிந்து வாழ கூடும்.
கணவன் ஒருபுறமும் மனைவி ஒருபுறமும் பிரிந்து வாழ்வதற்கான ஒரு சூழல் அந்த சண்டை கொண்டு வந்து விட்டு விடும்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முருகனின் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை தினமும் பாடினால் அவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் விலகி அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துவார்கள் என்பது ஐதீகம்.
இதோ அந்த பாடல்
கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு
கார்க்கடல் ஒன்றினாலே
கறுத்து அறச்சிவத்து அங்கி வாய்த்தெழு
திங்களாலே தனிக்கருப்பு விற் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ
தினைப்புனத்தினைப் பண்டு காத்த மடந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேல் திகழ் கந்தவேளே
பனைக்க ரக்கயத்து அண்டர் போற்றிய மங்கைபாகா
படைத்து அளித்து அழிக் கும் த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்