கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்
மனிதனுக்கு மனிதனால் மட்டுமே துன்பம் நேரும்.ஆனால் என்னதான் மனிதன் புரியாமல் ஆட்டம் ஆடினாலும் தக்க சமயத்தில் இறைவன் மிக பெரிய பதிலடி கொடுத்து இங்கு எதுவும் நிரந்திரம் இல்லை என்று உணர்த்துவார்.
அப்படியாக இறைவனை வழிபாடு செய்தாலும் அவர்களின் மந்திரங்கள் சொல்ல நமக்கு நிச்சயம் நல்லதோர் பலன் கிடைக்கும்.அளவு கடந்த துன்பம் ஏற்பட்டாலும் அதை தாங்கி செல்லும் சக்தியும் அதை மீண்டு வர வழியும் இறைவன் கொடுத்திருக்கிறார்.
அப்படியாக நாம் இப்பொழுது கார்த்திகை மாதம் நம்முடைய துன்பங்கள் தீர சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த வேல் மாறல் மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
வேல் மாறல் மகா மந்திரம்
‘திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில் உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே
வீரவேல் தாலைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை
வேலும் மயிலும் துணை
இந்த சக்தி வாய்ந்த வேல் மாறல் மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்யவேண்டும்.அதாவது 48 நாள் வீட்டில் உள்ள முருகர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி இந்த மகாமந்திரத்தைப் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். தினமும் காலை மாலை ஒரு முறை பாராயணம் செய்ய வேண்டும்.எதிரிகள் தொல்லை,தேவை இல்லாத மன குழப்பங்கள் விலகி முருகனின் அருளால் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |