நினைத்தது நிறைவேற முருகனை இப்படி ஒருமுறை வழிபடுங்கள்

By Yashini May 09, 2024 02:24 AM GMT
Report

உங்களுடைய நியாயமான வேண்டுதல் நிறைவேற மிகவும் எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபட்டாலே போதும்.

அந்த வேண்டுதல் எதுவாக இருந்தாலும் முருகப் பெருமான் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.

பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு உடனடியாக ஓடி வந்து அருள் செய்யக் கூடியக் கடவுள் முருகப் பெருமான்.

நினைத்தது நிறைவேற முருகனை இப்படி ஒருமுறை வழிபடுங்கள் | Murugan Worship Remedy For Fulfill All Your Desire

நினைத்தது நிறைவேற வேண்டும் என்றால் முருகப்பெருமானுக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.

தொடர்நது 9 வாரங்கள் இதை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள் வேண்டுதலை முருகப் பெருமான் நிறைவேற்றுவார்.

செய்யவேண்டிய பரிகாரம்

முதலில் உங்களின் வேண்டுதலை ஒரு பேப்பரில் எழுதி, நான்காக மடித்து, உங்கள் வீட்டின் பூஜை அறையில் வையுங்கள்.

பிறகு பேப்பரை எடுத்துக் கொண்டு முருகனுக்குரிய செவ்வாய் கிழமையில் வள்ளி-தெய்வானை சமேதராக இருக்கும் முருகப் பெருமானின் கோவிலுக்கு செல்லுங்கள்.  

செவ்வரளியால் மாலையை முருகனுக்கு சாத்தி, வேண்டுதல் எழுதி வைத்திருக்கும் பேப்பருடன் முருகப் பெருமானின் சன்னதியை 8 முறை நிதானமாக சுற்றி வாருங்கள்.

சன்னதியை வலம் வரும் போது மனதிற்குள்ளாக, "ஓம் சரவண பவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை சொல்லியபடி வலம் வாருங்கள்.

நினைத்தது நிறைவேற முருகனை இப்படி ஒருமுறை வழிபடுங்கள் | Murugan Worship Remedy For Fulfill All Your Desire

மொத்தம் 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். மந்திரத்தை சொல்லியபடியே 8 முறை சாதாரணமாகவும், 9வது முறை அடிப்பிரதட்சனமாகவும் வலம் வாருங்கள்.  

இது போல் தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்கிழமை செய்யுங்கள்.

9 வது வாரம் மூன்று ரோஜாப்பூ மாலை வாங்கிக் கொண்டு போய் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சாற்றை வேண்டும்.

அடுத்து குடும்பத்தில் இருப்பவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து, விபூதி பிரசாதத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடிப்பதற்கு முன்பாக உங்களின் வேண்டுதல் நிறைவேறும். 

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US