பகவத் கீதை: ஒருவருக்கு கர்மா எப்பொழுது செயல்பட தொடங்கும்
மனிதர்கள் சில நேரங்களில் எவ்வளவு முனைப்போடு செயல்பட்டாலும் எவ்வளவு நல்ல எண்ணத்தோடும் கடும் முயற்சி கொண்டு போரிட்டாலும் அவர்களுக்கு விதி என்னவோ அவர்கள் எதிர்பார்த்த பதிலை காட்டிலும் எதிர்மறையாக தான் கொடுக்கிறது. ஆனால் ஒருவர் நிறைய தவறுகள் செய்திருப்பார்கள்.
ஏன் பாவங்கள் கூட அவர்கள் அடுக்கடுக்காக செய்திருப்பார்கள். விதி அவர்களுக்கு எல்லா விஷயங்களையும் மிக நன்மையாகவே செய்து கொண்டிருக்கும். ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று நமக்கு பல நேரங்களில் பல கேள்விகள் வரும். அதற்கு பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு சொல்லக்கூடிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. கர்ம வினை என்பது நாம் எதிர்பார்த்த உடன் நடக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. கர்ம வினை என்பது ஒருவர் தீங்கு செய்தால் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு பல கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். சமயங்களில் அவர்களுக்கு மறுபிறவியில் கூட அவர்கள் செய்த பாவத்திற்கான பலன்கள் இருக்கும்.
இதை ஒவ்வொருவருடைய முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் ஏற்ப இந்த கர்ம வினை ஆனது செயல் படும். ஆக நாம் உடனடியாக தீங்கு செய்பவர்களுக்கு தீங்கு நடக்க வேண்டும் என்று எண்ணினால் கட்டாயமாக கர்மவினையானது அவ்வாறு இயங்குவது இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக இந்த கர்ம வினையானது அதனுடைய பதிலை தக்க சமயத்தில் கொடுத்து விடும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

2. மேலும் மனிதன் சந்திக்கின்ற பிரச்சினைகள் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய ஆன்மாவிற்கு கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பயிற்சி ஆகும். இந்த கடின காலங்களில் அவர்கள் பல உண்மையை அறிந்து கொள்வார்கள்.
அந்த உண்மையில் அவர்கள் தன்னை அறிந்து பிரபஞ்சம் அறிந்து ஒரு நல்ல தெளிவான நிலைக்கு வந்துவிடுவார்கள். ஆக மனிதன் சந்திக்க கூடிய ஒவ்வொரு வேதனையும் அவர்களுக்கான தண்டனை அல்ல அவர்கள் முன்னோக்கி செல்வதற்கான ஒரு வழி பாதை ஆகும்.
ஆக இன்றைய நாள் மட்டுமே முடிவில்லை என்பதை மனதில் கொண்டு, நாளை என்ற ஒரு நாள் இருப்பதையும் கருத்தில் வைத்து நம் வாழ்க்கையில் தர்மத்தோடும் நல்ல வழியில் சென்றும் வாழ வேண்டும். இவ்வாறு வாழ்ந்து விட்டோம் என்றால் எந்த ஒரு கர்ம வினையாக இருந்தாலும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யுமே தவிர்த்து தீங்கை கொடுத்து நமக்கு ஒரு கடினமான பாடத்தை கற்றுக் கொடுப்பதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |