கந்த சஷ்டி: நாளை முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த நெய்வேத்தியம் படைக்க தவறாதீர்கள்
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மகா கந்த சஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். உலகமெங்கிலும் இருக்கக்கூடிய பல முருக பக்தர்கள் இந்த மகா கந்த சஷ்டி விரதத்தை கடைபிடித்து முருகப்பெருமானுடைய அருளை பெறுவார்கள். அப்படியாக அக்டோபர் 27ஆம் தேதி மகா கந்தசஷ்டி விழாவின் மிக முக்கியமான நாள் ஆகும்.
அன்று தான் முருகப்பெருமான் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்வார். அப்படியாக மகா கந்த சஷ்டிக்கு பலரும் 48 நாட்கள், 21 நாட்கள், 7 நாட்கள் என்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இவை எல்லாம் முடியாதவர்கள் நாளை ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
அப்படியாக நாளை மகாகந்த சஷ்டி விழாவின் முக்கிய நாளில் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த இந்த நெய்வேத்தியத்தை படைத்து வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமான் மனம் குளிர்வார் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த நெய்வேத்தியங்களில் கந்தரப்பம் ஒன்று. தென் மாவட்டங்களில் முருகப்பெருமானுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியங்களில் கட்டாயம் இந்த கந்தரப்பம் இடம்பிடித்து விடும்.
இந்த கந்தரப்பமானது முருகப்பெருமானுக்கு படைக்கக்கூடிய நெய்வேத்தியமாக மட்டுமல்லாமல் இவை பக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. இவை வெறும் இனிப்பு பலகாரம் மட்டுமல்லாமல் ஆன்மீகம் கலந்த முருகப்பெருமானுக்காக படைக்க கூடிய ஒரு அன்பு பலகாரம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆக நாளை மகா கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் கட்டாயம் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்வோம். அதிலும் குறிப்பாக மகா கந்தசஷ்டி தினம் அன்று நாம் செய்யக்கூடிய இந்த கந்தரப்பம் இயல்பை விட மிக சுவையாக அமைய கூடியதாக இருக்கும் என்று பல பக்தர்கள் சொல்கிறார்கள்.
ஆக நாளை முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த கந்தரப்பம் படைத்து வழிபாடு செய்து முருகப்பெருமானுடைய அருள் பெற்று நம் வாழ்க்கை முழுவதும் இனிமையாக அமைய அவருடைய வாழ்த்துக்களை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |