முருகப்பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வதால் நடக்கும் அதிசயங்கள்
நாம் ஒருபொழுதும் இறைவழிபாட்டை மிகவும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இறைவழிபாட்டிற்கு எதையும் மாற்ற கூடிய சக்தி உண்டு. அப்படியாக, கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் உண்மையில் இந்த கலியுகத்திலும் நின்று பேசும் தெய்வம் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் முருகப்பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்கள் நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய தமிழ் பழமொழியில் 'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம்.
அதற்கு பலரும் பல காரணம் சொல்லுவார்கள். ஆனால், உண்மையில் அதற்கான காரணம் என்னவென்றால் எவர் ஒருவர் சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு விரைவில் கருவில் குழந்தை உண்டாகும் என்பதே ஆகும்.
இவ்வாறு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கூட முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வழிபாட்டை செய்து விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஏராளம்.
அப்படியாக, இன்னும் நம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் விலக ஆறுபடை முருகனுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் அவன் அருளால் நாம் நிறைய மாற்றங்களை சந்திக்கலாம்.
மேலும், முருகப்பெருமானுக்கு செய்யும் எந்த ஒரு விஷயமும் ஆறு என்ற எண்ணிக்கையில் செய்யும் பொழுது நம் வேண்டுதல் எளிதாக நிறைவேறுவதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும், முருகப்பெருமானுக்கு மிக உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை பல பக்தர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்த நாட்களில் முருகப்பெருமானை மனதில் நினைத்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால், தடைப்பட்ட காரியமும் எளிதாக நிறைவேறும்.
அதோடு, சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.
குறிப்பாக, நீண்டநாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள், கருவுற்று குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
அதே போல் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு 6 அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் முருகன் அருளால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
இவ்வாறு வழிபாடு செய்பவர்கள் முடிந்தால் குடும்பங்களுடன் ஒன்றாக அமர்ந்து வழிபாடு செய்தால் வேண்டுதல் இன்னும் பலம் பெற்று வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் விரைவில் சந்திக்கலாம்.
இந்த உலகில் நடக்காத விஷயம் என்று ஒன்று இல்லை. எந்த ஒரு விஷயங்களையும் முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்தால் வெற்றிகள் நிச்சயம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |