நாக சதுர்த்தி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் அருந்திய இந்நாள் நாக சதுர்த்தியாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தில் நாக தோஷம்,மேலும் பிற தோஷம் இருப்பவர்கள் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்வர்.
அதாவது நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்கு பூஜை செய்து, புற்றுக்கு பால் ஊற்றி, புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தை சொல்லிக்கொண்டே புற்றுக்கு பால் ஊற்றி பூஜிப்பது நல்லது.
நீண்ட திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
நாக சதுர்த்தி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.
மேலும் வாழ்க்கையில் தடங்கல் மட்டுமே சந்திப்பவர்கள் நாக சதுர்த்தி அன்று வழிபட வாழ்க்கையில் உள்ள தடங்கல் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |