காரிய தடை ஏற்பட காரணம் என்ன?
பலருக்கு எந்த காரியம் எடுத்தாலும் செய்தாலும் அதில் தடை என்பது இருந்து கொண்டு இருக்கும். ஒரு காரியம் நல்ல முறையில் தொடங்கி விடும் ஆனால் முடிவு என்பது கொஞ்சம் கடினமாகவும் சாதகம் இல்லாமல் இருக்கும்.
இது சின்ன விஷயங்கள் தொடங்கி எல்லா செயலுக்கும் பொருந்தும். பிறகு இது எதனால் என்று ஜோதிடம் பார்த்தால் புரிய வரும். நமக்கு ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கிறது என்று. நாக தோஷம் காரிய தடை உண்டாக்கும். அப்படி நாக தோஷம் இருப்பவர்கள் பயப்பட வேண்டாம்.
இறைவன் எல்லாவற்றிக்கும் வழி வகுத்து கொடுத்திருக்கிறான். அதே போல் நாக தோஷத்தால் துன்ப படுபவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரில் சிவ பெருமான் நாகபரணீஸ்வரர் என்னும் பெயரில் இருக்கிறார்.
இவரை வழி பட நாக தோஷம் விலகும்.
இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாளின் சன்னதியும் சரஸ்வதியுடன் பிரம்மாவின் சன்னதியும் உள்ளன.
இங்கு மும்மூர்த்திகள் இருப்பது சிறப்பு. கோயிலுக்குள் நுழைந்தால் நம் மனம் பிரமிப்பில் ஆழ்ந்து விடும். அந்த பிரமிப்பே ஒவ்வொரு சன்னதிகளாக கைபிடித்து உங்களை அழைத்துச் செல்லும்.
காரணம் ராதா, ருக்மணியுடன் கிருஷ்ணர், வலம்புரி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, சித்ர குப்தர் என பல சன்னதிகள் உள்ளன.
ராகு காலத்தின் போது வில்வார்ச்சனை செய்தால் நாக தோஷம் தீரும். அதோடு பெரிய நாயகி அம்மனை வலம் வந்து 'பெரியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன்' என வாக்கு அளியுங்கள்.
அப்படி செய்தால் ராகு, கேதுவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. இத்தலத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு.
அபிேஷகத்தின் போது மூலவர் சிலை சற்று சாய்வாக இருப்பதை காண முடியும். இங்கு புளியமரம் தல விருட்சமாக உள்ளது.
ஆக காரிய தடை இருப்பவர்கள் இங்கு சென்று ஒரு முறை இறைவனை வழிபட தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |