பித்ருக் கடன்களை தீர்க்கும் நகுலேஸ்வரர் திருக்கோவில்
பொதுவாக தமிழர்களின் கலாச்சாரம் என பார்க்கும் பொழுது கோயில்களுக்கு பஞ்சமே இருக்காது.
அந்த வகையில் இலங்கை தமிழர் பகுதியில் கிருதாயுகத்தில் தோன்றிய பஞ்சேஸ்வரத் தலங்களுள் கீரிமலை எனும் நகுலேஸ்வரர் திருக்கோவில் முதன்மையானதாக பார்க்கப்படுகின்றது.
இங்கு பரமசிவன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட இருக்கிறது. இதனை பார்ப்பதற்காகவே பக்தர்கள் அடிக்கடி வந்து செல்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
பகீரதன் கங்கையை பூமிக்கு வந்த போது அதன் துளிகள் பூமியில் பட்டு இந்த தீர்த்தம் உருவானதாக புராணக்கதைகள் உள்ளன.
அத்துடன் அன்னை பார்வதியின் குளிப்பதற்காக இந்த தீரத்தத்தை பரமசிவன் உருவாக்கினார் என புத்த சமய நூலான மகாவம்சம் சொல்கிறது.
மேலும், இந்த தலத்தில் நகுலமுனிவர் நீராடி வழிபட்டு, தனது கீரி முகம் நீங்கி நலம் பெற்றதால் இந்த கோயில் கீரிமலை என்றும், நகுலேஸ்வரம் கோயில் என்றும் பெயர் பெற்றது.
இது போன்று நகுலேஸ்வரர் திருக்கோவில் வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நகுலேஸ்வரர் திருக்கோவில்
நகுலேஸ்வரர் திருக்கோவிலானது கடந்த 19-ம் நூற்றாண்டிற்கு முன்பே கடலில் ஏற்பட்ட சீற்றத்தினால் நீருக்குள் அமிழ்ந்து போனதாக யாழ்ப்பாணப் புலவர் ஆறுமுகநாவலர் எழுதியிருக்கிறார். ஆலயம் கிழக்கு முகமாய் நான்கு மாட வீதிகளும் மூன்று பிரகாரங்களும் உள்ளன.
தரைமட்டத்திலிருந்து சுமாராக 117 அடி உயர ஒன்பது நிலை ராஜகோபுரம் 9 கலசங்களைத் தாங்கி, விண்ணை முட்டும் அளவிற்கு ஓங்கி நிற்கும்.
கோயிலுக்கு வருபவர்கள் காண்பதற்காக கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் நம்மை வரவேற்க, ஈசான்ய மூலையில் சித்தர் மூலம் உருவான சகஸ்ரலிங்கம் மற்றும் நவக்கிரக சன்னிதி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.
இரண்டாம் பிரகாரத்தில் வசந்த மண்டபம் மற்றும் துர்க்கை சன்னிதியும் உள்ளன. மேலும் கருவறையில் இலங்கையின் பெரிய சிவலிங்கத் திருமேனியராக ஐந்தரை அடி உயர நகுலேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சியளிப்பார்.
கருவறையிலிருந்து தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர் அமர்ந்துள்ளனர். சண்டிகேஸ்வரர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார்.
தெற்கு வாசலில் அன்னை நகுலாம்பிகை அம்பாள், நின்ற கோலத்தில் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் கொண்டும் காட்சி தருகிறார்.
பஞ்சலிங்கம், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, சரபேஸ்வரர், மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |