பங்குனி மாதம் மட்டும் தங்கமாக மாறும் அதிசய நந்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அமைந்து உள்ளது அருள்மிகு அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் திருக்கோயில். இது சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 3 ஆம் தேதியன்று நந்தி சிலை தங்கமாக மாறும் அதிசயம் நடக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
அருள்மிகு அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மிகவும் பிரசத்தி பெற்ற திருத்தலமாகும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் இக்கோயிலுக்கு தரிசனம் செய்ய தவறமாட்டார்கள்.
இந்த கோவிலில் மூலவருடன் தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் உள்ளது. இதோடு, கோயில் வளாகத்தில் மிகப் பெரிய நந்தி சிலையும் உள்ளது.
இந்த நந்தி சிலையில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது சூரிய ஒளி கதிர்கள் கோவில் ராஜ கோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது விழ, அடுத்த சில நிமிடங்களிலே, நந்தீஸ்வரர் தங்கமாக மாறி காட்சியளிப்பார்.
அதுவும் இந்த நிகழ்வு தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. அதாவது, தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம், 3ம் தேதியன்று மாலை 5-40 முதல் 6-00 மணி வரை நந்தி பகவான் மீது மாலைவெயில் பட்டதும் தங்கநிறத்தில் மாறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இந்த நிகழ்வை பார்க்கவே ஆச்சிரியம் அளிக்கும் விதமாக இருக்கும். இந்த அற்புத கட்சியை காண பல பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |