இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்

By Sakthi Raj Jun 19, 2025 11:01 AM GMT
Report

நம்முடைய இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு நாம் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். அப்படியாக, ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது. அந்த வகையில் இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம். அதை பற்றி பார்ப்போம்.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

உத்திரம் நட்சத்திரம்:

பொதுவாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும்  விசுவாசமானவர்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்களின் மனைவியை அன்பாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள். அவர்கள் மனைவியை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் பேசக்கூடியவர்கள்.

அனுஷம் நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எதையும் முடிவு செய்வார்கள். மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டார்கள்.

ரோகிணி நட்சத்திரம்:

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் விசுவாசமானவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அவர்களின் மனைவிக்கு எப்பொழுதும் எந்த ஒரு துரோகமும் செய்யமாட்டார்கள். குடும்பத்திற்கு என்ன தேவை என்று அறிந்து அதை முதலில் நிறைவேற்றி கொடுப்பவர்கள்.

திருவோணம் நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். தங்களின் மனைவிக்கு அதிக அளவில் மரியாதையை கொடுப்பவர்கள். அவர்களை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். தங்களின் குடும்ப மகிழ்ச்சிக்காக மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US