நவகிரக தோஷம் விலக சித்தர்கள் அருளிய மந்திரங்கள்
ஜோதிடத்தில் நவகிரகங்கள் மிக மிக முக்கியமானவை. இந்த நவகிரகங்கள் வைத்து தான் ஒருவர் வாழ்க்கையே செயல்படுகிறது என்று சொல்லலாம்.
அதாவது மனிதனின் தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள், ஜாதகர் செய்யும் தொழில், உடன் பழகும் நண்பர்கள் என்று இவை எல்லாம் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் நவகிரகங்கள் அமைந்து இருக்கும் கட்டம் பொறுத்தே அமைகிறது.
அப்படியாக, சிலருக்கு இந்த நவகிரக தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு தோஷம் உள்ளவர்கள் வாழக்கையில் மிக பெரிய துன்பங்களையும், தடங்களையும் சந்திக்கக்கூடும்.
இவ்வாறு நவகிரகம் தோஷம் மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடும் என்று அறிந்து தான், அதில் இருந்து விடுபட அவர்களுக்காக சித்தர்கள் சில மந்திரங்கள் விட்டு சென்று இருக்கிறார்கள்.
அந்த வகையில், நாம் எந்த கிரகங்களால் அவதிப்படுகின்றமோ, வியாழக்கிழமையில் அந்தந்த கிரகத்தின் ஓரைகளில் 108 முறை இந்த மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யலாம். இவ்வாறு சொல்லி வர அவர்களுக்கு ஏற்பட்ட நவகிரகம் தோஷம் விலகி அவர்கள் வாழ்க்கையில் சிறந்த பலன் கிடைக்கிறது.
மந்திரங்கள்:
கேது- ஓம் அம்ரீ உம் கேது தேவாய நம
சூரியன்- ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம
சந்திரன்- ஓம் உம் சிவாய சந்த்ர தேவாய நம
செவ்வாய்- ஓம் சம் ஹ்ரி உம் அங்காரக தேவாய நம
புதன்- ஓம் மம் ஹ்ரிஉம் சிவபுத தேவாய நம
குரு- ஓம் சும் சிவாய வசி குரு தேவாய நம
சுக்கிரன்- ஓம் சும் ரீஉம் சுக்ர தேவாய நம
சனி- ஓம் லம் சனீஸ்வராய நம
ராகு- ஓம் லம் ஐம் கிலிம் செளம் ராகுதேவாய நம
நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ அனைவரது அருளும் ஆசீர்வாதமும் தேவை. அதில் மிக முக்கிய பங்கு இந்த நவகிரகங்களுக்கும் இருக்கிறது. அதனால் கோயில்களுக்கு சென்றாலும், முறையாக நவகிரகங்களை வழிபாடு செய்து வர வேண்டும்.
நம்மை சுற்றி நடப்பதை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், இந்த நவகிரகங்கள் நம்மை ஒவ்வொரு பொழுதும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |