நவகிரக பாதிப்பில் இருந்தும் காப்பாற்றும் ஐயப்பன் வழிபாடு
நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு மிக மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.அபப்டியாக கிரகங்கள் மொத்தம் ஒன்பது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை ஆகும். இவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு அதிபதி இருக்கின்றார். அந்த அதிபதியே கிரகங்களின் அதிதேவதை ஆகும். அவர்களை நாம் வழிபட்டால் போதும் வாழ்க்கையில் நினைத்ததை அடையமுடியும்.
நவகிரகங்களில் முதல் கிரகமான சூரியனின் அதிதேவதை சிவபெருமான்.நாம் சிவனை வழிபட்டால் கர்மவினைகள் அடியோடு தீர்ந்து வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
நவகிரகங்களில் இரண்டாவது கிரகமான சந்திரனின் அதிதேவதை பார்வதி.அம்பாள் வழிபாடு எப்பொழுதுமே வெற்றியையே குறிக்கும்.அப்படியாக பார்வதி தேவியை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
நவகிரகங்களில் முன்றாவது கிரகமான செவ்வாயின் அதிதேவதை முருகன்.வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் மனம் துவண்டு வாழும் பொழுது முருகனை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
நவகிரகங்களில் நான்காவது கிரகமான புதனுக்குரிய அதிதேவதை விஷ்ணு.பெருமாளை வழிபாட மந்த நிலை குறைந்து தெளிவான சிந்தனை பிறக்கும்.விஷ்ணுவை வழிபட்டால் புத்தி கூர்மை கிடைக்கும், அறிவாற்றல் பெருகும்.
நவகிரகங்களில் ஐந்தாவது கிரகமான வியாழனின் (குரு) அதிதேவதை பிரம்மா, தட்சணாமூர்த்தி. பிரம்மாவையும், தட்சணாமூர்த்தியையும் வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
நவகிரகங்களில் ஆறாவது கிரகமான சுக்கிரனின் அதிதேவதை லட்சுமி, இந்திரன், வருணன்.வாழ்க்கையின் மிக தேவையான விஷயங்கள் நல்ல குடும்பம் நல்ல சமுதாய பொறுப்பு.அப்படியாக இவர்களை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
நவகிரகங்களில் ஏழாவது கிரகமான சனி பகவானின் அதிதேவதை ஐயப்பன்.ஐயப்பனை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும்.
நவகிரகங்களில் எட்டாவது கிரகமான ராகுவின் அதிதேவதை காளி, துர்க்கை, மாரியம்மன். ராகுவிற்குரிய தெய்வங்களை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.மிகவம் சக்தி வாய்ந்த தெய்வங்கள் இவர்களை வழிபட வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
நவகிரகங்களில் ஒன்பதாவது கிரகமான கேதுவின் அதிதேவதை விநாயகர், சண்டிகேஸ்வரன் இந்த தெய்வங்களை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய அதிதேவதைகளான தெய்வங்களை அந்த தெய்வத்திற்குரிய கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
குறிப்பாக ராகு கிரகத்திற்கான தெய்வத்தை ஞாயிற்றுக்கிழமையில் வணங்குவது நல்லது. கேது கிரகத்தை வழிபட திங்கட்கிழமை எமகண்ட நேரத்தில் வழிபட்டால் கேதுவின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |